சத்தான சமோசா (குழந்தைகளுக்கு)

தேதி: January 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தோல் நீக்காத பச்சை பயிறு - 4 மேஜைக்கரண்டி
2. மைதா - 2 கப்
3. பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு - ருசிக்கு


 

மாவை வழக்கம் போல் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
பயிறை வேக வைக்கவும். பச்சை மிளகாய் நசுக்கி வைக்கவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து, வேக வைத்த பயிறு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நீர் இல்லாமல் பிரட்டி எடுக்கவும்.
மாவை சின்ன உருண்டை ஆக்கி, சின்ன வட்டமாக தேய்த்து, பாதியாக வெட்டி, ஒவ்வொரு பாதியையும் கோன் போல் மடித்து ஒட்டி, அதில் சிறிது பயிறு கலவை வைத்து மூடவும்.
இது போல் எல்லாம் செய்து வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சமோசா பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்