கார்ன் தோசை (குழந்தைகளுக்கு)

தேதி: January 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. தோசை மாவு - தேவைக்கு
2. வேக வைத்த மக்காச்சோளம் - 1/2 கப்
3. வெங்காயம் - 2 (மெல்லியதாக கீரியது)
4. துருவிய சீஸ் - ருசிக்கு
5. உருளைக்கிழங்கு - 2
6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
7. பச்சை மிளகாய் - 2
8. கறிவேப்பிலை
9. இஞ்சி - சிறிது
10. முந்திரி - 5
11. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
12. உப்பு


 

உருளை வேக வைத்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், முந்திரியும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கவும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், முந்திரி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் உருளை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும்.
வழக்கம் போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கலவை சிறிது, அதன் மேல் வேக வைத்த மக்காச்சோளம், துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாறவும்.


விரும்பினால் பெருங்காயம் கூட சேர்க்கலாம் உருளை மசாலா செய்யும்போது. இஞ்சி பிடிக்காது என்றால் வேண்டாம்.

மேலும் சில குறிப்புகள்