கிட்ஸ் உருளைக்கிழங்கு ப்ரை

தேதி: January 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

உருளைக்கிழங்கு - 3
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு கால் இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அவனை 375 Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.
பிரட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.
பின்னர் முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் 25 - 30 நிமிடங்கள் வைக்கவும்.
25 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கு வெந்ததும் வெளியில் எடுத்து பரிமாறவும்.
சுவையான குறைந்த அளவு எண்ணெய் உபயோகித்து செய்த கிட்ஸ் உருளைக்கிழங்கு ப்ரை தயார். இதனை கலந்த சாத வகைகளுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல்</b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பின்னூட்டம் புது தளத்தில் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் கையை கட்டி போடமுடியலை,சிம்பிளான டேஸ்டி ரெசிப்பி.நான் அலுமினியம் ஃபாயில் போட்டா ஒட்டிக்குது,அதனால் நான் அலுமினியம் பாயில் இல்லாம நேரடியாவே பேக்கிங் ட்ரேயில் ஆயில் கிரீஸ் பண்ணி வைத்துவிடுவேன்.எப்படி உங்களுக்கு ஒட்டாமல் வருது?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கீதா ஆச்சல் இன்று மதியம் ல்ன்சுக்கு செய்தேன். எல்லாம் உடனே காலி! மிளகாய்தூளுக்கு பதில் சாம்பார் பொடி போட்டு செய்தேன். எண்ணெயும் குறைவு. நல்லதொரு ரெசிபிக்கு நன்றி.

ஆசியா நான் அலுமினியம் ஃபாயில் மேல் ஆயில் தடவி பேக் பண்ணினேன். பேக் முடிந்து 5 நிமிடம் கழித்து எடுத்தால் ஒட்டாமல் வந்தது.

ஆசியா அக்கா,
மிகவும் நன்றி. நீங்கள் மாலி கூறியது போல 5 நிமிடம் ஆறிய பிறகு எடுத்தால் ஓட்டாது.
நீங்கள் உருளைக்கிழங்குடன் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டால் நன்றாக வரும்.
மாலி அவர்களுக்கு
மிகவும் சந்தோசம். எண்ணெயில் பொரித்தது போல் இருக்கும். ஆமாம் இதில் மிகவும் குறைந்த அளவில் எண்ணெய் உபயோகித்து செய்வதால் உடம்பிற்கு நல்லது.
நன்றி

Parchment paper use pannalum ottamal varum. Tasty recipe.