வாழைக்காய் வறுவல்

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 2
எண்ணெய் - கால் லிட்டர்
உலர்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

வாழைக்காயைச் சுத்தம் செய்து தோலை சீவி வறுவல் சீவல் தட்டில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், பெருங்காயத்தைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்து உப்பையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வையுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சிறிது வாழைக்காய் சீவலைப் போடுங்கள்.
காய் ஒரு பக்கம் சிவந்து வறுபட்டதும் திருப்பிப் போட்டு அந்த பக்கமும் வெந்து சிவந்தவுடன் எடுத்து எண்ணெயை வடித்து ஒரு தட்டில் போடுங்கள். மிளகாய்பொடியைத் தூவி நன்றாகத் தடவி வைத்து உபயோகியுங்கள்.


மேலும் சில குறிப்புகள்