காலிப்ளவர் மஞ்சூரியன் (ட்ரை)

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

காலிஃப்ளவர் - 1
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கார்ன் மாவு - 1/2கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2டேபிள்ஸ்பூன்
கேசரிகலர் - 1 பின்ச்
எண்ணெய் - 1 கப்


 

அடர்த்தியாகவும், வெண்மைநிறமாக உள்ள காலிஃப்ளவரைப் பார்த்து வாங்கவும்.
பூவை சிறு இதழ்களாக நறுக்கிக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு கொதி வந்ததும் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கிளறி,உடனே அடுப்பை அணைத்து விடவும். நன்கு வெந்து விட்டால் க்ரிஸ்பியாக வராது.
வடிதட்டில் கொட்டி நன்கு நீர் வடிய விடவும்.
எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் காலிஃப்ளவரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேனகா,உங்களுக்காக இந்த ரெஸிப்பியை கொடுத்துள்ளேன்.சுலபமானதுதான்.செய்து சாப்பிட்டு,சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நான் கேட்டதும் ரெஸிபி கொடுத்திட்டீங்க.செய்துப் பார்த்து சொல்றேன்.நான் செய்யும் தப்பு இப்பத்தான் புரியுது.நான் தண்ணீல பூவை நல்லா வேகவைத்துத்து பொரிப்பேன்.சதசதன்னு எண்ணெய் குடித்த மாதிரி இருக்கும்.என் ஹஸ் கூட காலிபிளவர் பொங்கல்செய்திருக்கன்னு கிண்டல் பண்ணுவார்.

உண்மைதான் மேனகா..நன்கு வேக வைத்தால் பொங்கல்,பாயாசம் எல்லாமுமாக ஆகி விடும்:)வென்னீரில் போட்டு உடனேயே வெண்மை நிறம் மாறாமலே எடுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.அதிகம் எண்ணெய் குடிக்காது.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகாக்கா நேற்று இந்த குறிப்பை செய்தேன்.ரொம்ப நல்ல கிரிஸ்பியா இருந்தது.சூப்பர்ர்ர்ர்ர் ஆக இருந்தது.என்ன ஆச்சர்யம் என் ஹஸ்க்கு கொஞ்சம் தான் மீதி வைத்தேன்.முக்கால்வாசி நானே சாப்பிட்டுட்டேன்.படம் எடுத்து வைத்திருக்கேன் ஆனால் இன்னும் கம்ப்பூட்டரில் இணைக்கல,இணைத்ததும் அட்மினுக்கு அனுப்புரேனக்கா.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. மேனகா அவர்கள் தயாரித்த காலிஃப்ளவர் மஞ்சுரியன் டிரையின் படம்

<img src="files/pictures/aa148.jpg" alt="picture" />

இது வரை காலிபிளவர் மஞ்சூரியனை காலிபிளவர் பொங்கலாக செய்த தங்கை,இப்போது குறிப்பு கொடுத்த என்னை விட மிக அழகாக செய்து அசத்தி இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது.நீள வண்ண தட்டில் செந்நிற மன்சூரியனை அழகாக பிரஷண்ட் செய்து அசத்திய மேனுவுக்கு என் பாராட்டுகளும்,நன்றியும்.வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா
காலி பிளவர் மஞ்சூரியன் (டிரை) செய்தேன் கிரிஸ்பிய ரொம்ப நல்ல இருந்தது.
எங்கள் விட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டோம் அக்கா. நானும் இதே மாதிரி தான் செய்வேன் ஆனால் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து செய்வேன். உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
மைதிலி.

Mb

பின்னூட்டத்திற்கு நன்றி.இஞ்சிபூண்டு விழுது சேர்த்தால் டேஸ்ட் மாறி விடும்.இவ்வளவு கிரிஸ்பியாக இருக்காது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த காலி பிளவர் மஞ்சூரியனின் (டிரை)படம்

<img src="files/pictures/aa235.jpg" alt="picture" />

உங்கள் சுறுசுறுப்பையும்,ஆர்வத்தியும் எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை .ரொம்ப தேங்க்ஸ் ஜலீலா.வெளியிட்ட அறுசுவை நிர்வாகத்திற்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, இக் குறிப்பு சூப்பராக இருந்தது. நான் குறைந்த அளவு எண்ணெய் உபயோகித்தே செய்தேன். அதுவும் கிறிஸ்பியாக இருந்தது. என் பெண் விரும்பி சாப்பிட்டாள். நன்றி உங்களுக்கு

அன்பு வின்னி,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.மகள் விரும்பி சாப்பிட்டது மகிழ்ச்சியைத்தருகின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அரிசிமாவு, மைதா, கார்ன் ஃபிளர், மிளகாய்தூள் எல்லாவற்றையும் கலக்க எவ்வளவு தண்ணீர் சேர்ப்பது?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.