புளிகத்தரிக்காய்

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 1/4 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறுதுண்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
கத்தரிக்காய் காம்பை நீக்கி விட்டு நீளமாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் வெங்காயத்தை வதக்கி, அத்துடன் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
எண்ணெயிலே வதங்கியதும், மிளகாய், உப்பு, வெல்லம், புளிகரைசல் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளிக்கவும்.
நன்கு சுருண்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்கிவிடவும்.


விரும்பினால் வேர்க்கடலை, தனியா, மிளகாய், எள் இவற்றை வறுத்து பொடி செய்து, இவற்றையும் சமைத்த கத்திரிக்காயில் தூவி கலந்து கொள்ளலாம். சுவை வித்தியாசமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi shadique,

yesterday i prepared it.It came very well.Best side dish for briyani.Thanks for this receipe.

Anbudan Anu

புளி தொக்கு உண்மையில் வெகு அருமை. என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார். அவருக்கு காரம் புளிப்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

எண்ணெய்கத்திரிக்காய் குறிப்பு இதோ.இதனை நாங்கள் புளிக்கத்தரிக்காய் என்று குறிப்பிடுவோம்.
பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அதுதான் இதுன்னு தெரியலை. கண்டிப்பா செய்து பார்த்துட்டு பின்னூட்டமும் அனுப்புகிறேன். போட்டோவில் பார்க்கவே ஆசையாய் இருக்கு.நன்றி!

அக்கா!
புளிக்கத்திரிக்காய் இப்பதான் செய்து டேஸ்ட் பண்ணிட்டு வர்றேன். உப்பு,புளிப்பு,இனிப்பு டேஸ்டுடன் சூப்பரா இருக்கு. சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுகிறார்போல் கொஞ்சம் முன்னாடியே எடுத்திட்டேன். போட்டோவும் எடுத்திருக்கேன்.
நன்றிங்க்கா!

புளிக்கத்திரிக்காய் நன்றாக வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி கீதா. உடனேயே பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

திருமதி. சாய்கீதா லெட்சுமி அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த புளிக்கத்தரிக்காயின் படம்

<img src="files/pictures/aa56.jpg" alt="picture" />

புளிக்கத்தரிக்காய் செய்து படம் எடுத்து அனுப்பிய தங்கை சாய்கீதாலக்ஷ்மிக்கும்,படத்தை வெளியிட்ட தம்பி அட்மினுக்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

புளிக்கத்தரிக்காய் செய்து படம் எடுத்து அனுப்பிய தங்கை சாய்கீதாலக்ஷ்மிக்கும்,படத்தை வெளியிட்ட தம்பி அட்மினுக்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சூப்பர் டேஸ்ட்.இன்னும் இந்த சுவை அப்படியே இருக்கு.நன்றி சாதிகாக்கா!!

புளிக்கத்தரிக்காய் செய்து விட்டீர்களா?மிகவு நன்றி.உங்கள் பதிவுகள் என்னை உற்சாகப்படுத்துகின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சிம்பிள் ஆனால் அருமையான ருசி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்தியா வந்து விட்டீர்களா?மகளை ஊரில் பள்ளியில் சேர்த்து விட்டீர்களா?மாமனார் இப்போது எப்படி இருக்கின்றார்.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்தியாவில் தான் உள்ளேன்.மகளுக்கு இன்று entrance test.8th admission.மாமா விரைவில் எழுந்து நடமாடவேண்டும்.அதுதான் பெரிய கவலை.மற்றபடி நல்ல குணமாக உள்ளார்கள்.இனிமேல் இங்கு தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவலைப்படாதீர்கள்.உங்கள் மாமனார் விரைவில் எழுந்து நடமாடி பழைய நிலைக்கு திரும்பி விடுவார்.நானும் துஆ செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஷாதிகா அக்கா,
நலமா? வீக்கென்டில் வெஜிடபிள் புலாவ் செய்தேன். பசங்க சாப்பிட வேண்டுமே என்று ரொம்ப லைட்டான காரத்தில், கீறிய பச்சை மிளகாய்களோடு மட்டும். என்னவருக்கு பிரியாணி, புலாவ் எல்லாம் கொஞ்சமாவது காரமா இருக்கவேண்டுமென்பார்! :) சரி, என்று கூட சாப்பிட உங்க புளிக்கத்திரிக்காய் செய்தேன். சும்மா சூப்பர் காம்பினேஷன் அக்கா!. நான் நீங்க சொன்னமாதிரி கடைசியில் கொஞ்சம் பயிறு, எள் எல்லாம் வறுத்து பொடி செய்து போட்டு எடுத்தேன். ரொம்ப அருமையா இருந்தது. அன்று சாப்பிட்டு பிறகு, மீதியை மறுநாள் தயிர் சாதத்திற்கும் சாப்பிட்டோம்.
எளிமையான, ஆனால் அருமையான இந்த குறிப்புக்கு மிக்க நன்றி அக்கா!.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ