சுக்கினி கூட்டு

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கடலை பருப்பு (அ) பாசிபருப்பு - 1 கப்
2. சுக்கினி (சின்னது) - 2
3. வெங்காயம் (சின்னது) - 1
4. தக்காளி (சின்னது) - 1
5. மிளகாய் வற்றல் - 2 (விதை நீக்கியது)
6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு
11. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தாளிக்க


 

சுக்கினி தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
குக்கரில் சுக்கினி, வெங்காயம், தக்காளி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான தண்ணீர் (அதிகம் வைக்க வேண்டாம்) சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து கரண்டியால் மசிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க விடவும்.
பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுக்கவும்.
இதில் மசித்த கூட்டு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடன் சிக்கன் வறுவல்.... இன்னும் சுவை சேர்க்கும். சூப்பரா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்