சௌசௌ கூட்டு

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கடலை பருப்பு (அ) பாசிபருப்பு - 1 கப்
2. சௌசௌ - 1
3. வெங்காயம் (சின்னது) - 1
4. தக்காளி (சின்னது) - 1
5. மிளகாய் வற்றல் - 2 (விதை நீக்கியது)
6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு
11. பச்சை மிளகாய் - 1
12. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தாளிக்க


 

சௌசௌ தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் கீரவும்.
குக்கரில் சௌசௌ, வெங்காயம், தக்காளி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பச்சை மிளகாய், தேவையான தண்ணீர் (அதிகம் வைக்க வேண்டாம்) சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து கரண்டியால் மசிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க விடவும்.
பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுக்கவும்.
இதில் மசித்த கூட்டு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


விரும்பினால் தாளிக்கும் போது சிறிது பெருங்காயம் சேர்க்கலாம். சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடன் சிக்கன் வறுவல், மீன் வறுவல்.... இன்னும் சுவை சேர்க்கும். சூப்பரா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களுடைய இந்த செள செள கூட்டு இன்று செய்தேன் ஒரு பூண்டு மட்டும் சேர்த்துக்கொண்டேன் நன்றாகவே வந்து இருந்தது.அதுப்போல் கடலைப்பருப்பில் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க நன்றி மஹா. :) நானும் அதிகம் கடலைபருப்பு தான் பாவிப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வனிதா!

இன்று உங்களின் செள செள கூட்டும் உருளைக்கிழங்கு பொரியலும் செய்தேன். இரண்டுமே சுவையாக இருந்தன. செள செள கூட்டு சற்று வித்தியாசமான குறிப்பாக இருந்தது. நான் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையுமே ஒரே அளவில் சேர்த்துக்கொண்டேன்

மிக்க நன்றி Mrs. Mano. நான் இவ்வளவு விரைவில் செய்துவிட்டு பின்னூடம் தருவீர்கள் என்று நினைக்கவே இல்லை.:) உங்கள் பின்னூட்டத்தை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா