புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

கடலைப்பருப்பு - 1 கப்,
சிறிய புடலங்காய் - 1,
பெரிய வெங்காயம் - 1,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
அரிசி - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

புடலங்காயை சன்னமாக அரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தை சுமாராக நறுக்கவும்.
கடலைப்பருப்புடன் புடலங்காய், வெங்காயம், தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெறும் வாணலியில் சீரகம், மிளகு, அரிசியை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
குக்கரை திறந்து, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா இந்த கூட்டு இன்னைக்கு செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.
ஆனா மிளகாயை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்லை. நான் கடுகு கறிவேப்பிலையுடன் தாளிச்சு கொட்டிட்டேன்.
நன்றி!

இன்று மதியம் இந்த கூட்டு செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. என் திறமையும் கூடுகிறது (அருசுவயாலும், அன்பு சகோதரிகளாலும்) அனைத்துக்கும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

It's very nice.