அரிசி வடாம்

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : ஞாயிறு, 18/01/2009 - 21:19

ஆயத்த நேரம் : ஒரு நாள்

சமைக்கும் நேரம் : 1 மணி நேரம்

பரிமாறும் அளவு : 1/2 கிலோ வடாம் வரும்.

0
No votes yet
Your rating: None
 

 

  • பச்சரிசி - 1/2 கிலோ,
  • பச்சை மிளகாய் - 10,
  • பெருங்காயம் - சிறிது,
  • சீரகம் - 2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

 

  • பச்சரிசியை காலையில் கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மாலையில் கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றி இட்லிக்கு அரைக்கும் பதத்திற்கு அரைக்கவும்.
  • இரவு முழுதும் அப்படியே வைக்கவும்.
  • பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.
  • அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரையும், மிளகாய் விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும் போது தீயை குறைத்து வைத்துக் கொண்டு, அரைத்த மாவை ஊற்றி கிளறவும்.
  • சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • மாவு நன்கு வெந்து அல்வா போல் பளபளப்பாக தெரியும்.
  • அப்போது இறக்கி முறுக்கு குழாயில் நட்சத்திர அச்சோ, ஓமப்பொடி அச்சோ போட்டு, மாவை நிரப்பவும்.
  • வெயிலில் ப்ளாஸ்டிக் சீட்டோ அல்லது ஈரமான துணியோ விரித்து, நீள நீளமாக பிழிந்து விடவும்.
  • 2 அல்லது 3 நாட்கள் காய வைக்கவும்.
  • காய்ந்ததும் துணியிலிருந்து எடுத்து, தேவையான நீளத்திற்கு ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
  • தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Note:

எண்ணெயில் பொரித்தால் இரு மடங்கு உப்பி சுவையாக இருக்கும்.