இஞ்சி பர்பி

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இஞ்சி - 150 கிராம்
சர்க்கரை - 600 கிராம்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மைதாமாவு - 2 டீஸ்பூன்


 

இஞ்சியை சுத்தம் செய்து, தோல் நீக்கி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை 1/2 கப் நீரில் கரைத்து பாகு காய்ச்சவும்.
பாகை கையால் எடுத்து உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வரும் பதத்திற்கு இருக்க வேண்டும்.
பாகு அடுப்பில் இருக்கும் பொழுதே இஞ்சி விழுது, அரிசிமாவு சேர்த்துக்கிளறி இறக்கவும்.
மைதா மாவு தூவிய அகலமான தட்டில் விழுதை கொட்டி, தட்டையான கரண்டியால் சமமாக பரப்பி, சூடாக இருக்கும் பொழுதே, சிறிய சதுரங்களாக வில்லைகள் போட்டு, நன்கு ஆறவிட்டு, பிரித்து எடுக்கவும்.
தொண்டைகரகரப்பு. இருமல், சளி போன்றவற்றுக்கு ஏற்ற பர்பி இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

இஞ்சி பர்பி செய்தேன் நன்றாக வந்தது. எவ்வளவு நாட்கள் வைத்துப் பாவிக்கலாம்.உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இஞ்சி பர்பி நன்றாக வந்தது குறித்து மகிழ்ச்சி.செய்தவுடன் பின்னூட்டமும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.ஒரு வாரத்துக்கும் மேல் வைத்து இருக்கலாம்.ஏர் டைட் கண்டைனரில் ஸ்டோர் செய்து பிரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website