இனிப்பு சீரக சட்னி

image

வழங்கியவர் : geethaachal

தேதி : ஞாயிறு, 18/01/2009 - 23:25

ஆயத்த நேரம் : 1 நிமிடம்

சமைக்கும் நேரம் : 5 - 8 நிமிடம்

பரிமாறும் அளவு : 3

0
No votes yet
Your rating: None
 

 

  • வெல்லம் - 100 கிராம்
  • சீரகம் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - 1/4 தேக்கரண்டி

 

  • முதலில் ஒரு கடாயில் சீரகத்தினை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தினை 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • வறுத்த சீரகத்தினை நன்றாக பொடித்து கொள்ளவும்.
  • பின்னர் கரைந்து உள்ள வெல்லத்தில் சீரகம் பொடி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இப்பொழுது சுவையான இனிப்பு சீரகம் சட்னி ரெடி.

Note:

இதனை சமோசா, பப்ஸ், பானி பூரி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.