முள்ளங்கி சாம்பார்

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

முள்ளங்கி - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 3 இலை
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க


 

முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
பின் முள்ளங்கியை தோல் சிவி சிறிய சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
வெங்காயத்தினை தோல் உரித்து வைக்கவும். தக்காளியை நீளமாக வெட்டி கொள்ளவும். புளியினை கரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள புளியினை சேர்த்து கலக்கவும்.
பின்னர் வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதனை ப்ரஷ்ர் குக்கரில் போடவும்.
அதே கடாயில் முள்ளங்கியை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் இதனையும் குக்கரில் போட்டு நன்றாக வேகவிடவும்.
இப்பொழுது சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

முள்ளங்கி சாம்பார் செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது.

மிகவும் நன்றி விஜி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா உங்களுடைய முள்ளங்கி சாம்பார் செய்தேன் நல்லா இருந்தது.நன்றி கீதா.

மிகவும் நன்றி கவி,
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

நானும் இதுபோல் செய்வேன். நன்றாக இருந்தது கீதா.
செல்வி

சவுதி செல்வி

மிகவும் நன்றி செல்வி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா.

நான் இன்று உங்கள் முள்ளங்கி சாம்பார் செய்தேன் சுவையாக இருந்தது.மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

கீதா இன்று முள்ளங்கி சாம்பார் செய்தேன் நன்றாக இருந்தது, அதுவும் இன்று பச்சைமுள்ளங்கி கிடைத்து மிகவும் ருசியாக இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China