சுட்ட மசாலா மீன்

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நடுத்தர சைஸ் மீன் - 5,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி,
கிராம்பு - 5,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாய்த்தூள், கிராம்பு, கரம் மசாலா, உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
மீனை லேசாக கீறி மசாலை நன்கு தடவவும்.
மெல்லிய தோசைக்கல்லை வைத்து நெய் தடவி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.


சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். தனியாகவும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்