மாங்காய் வெல்லப்பச்சடி

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 3
உப்பு - சுவைக்கேற்ப
வெல்லத் தூள் - 3 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு


 

மாங்காயை, தட்டையாக, செதுக்கிய விதமாக, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கவும்.
இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
வெந்த மாங்காய், மிளகாய் கலவையை மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, மசித்த கலவையை அதில் ஊற்றவும்.
வெல்லத் தூளை அதில் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து, இறக்கவும்.


சித்திரை மாதப் பிறப்பன்று சமையலில் இந்தப் பச்சடி இடம் பெறும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆ சீதா லக்ஷ்மி அக்கா வாய் ஊறுகிறது.

ஜலீலா

Jaleelakamal