பீர்க்கங்காய் தக்காளி கூட்டு

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பீர்க்கங்காய் - 1
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ - 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 3/4 ஸ்பூன்
பூண்டு - 1 பல்
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை


 

பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி விட்டு சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
தேங்காய்ப் பூ, சீரகம், பச்சை மிளகாய், பூண்டு மிக்ஸியில் அரைக்கவும்.
குக்கரின் மேல் பாத்திரத்தில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றவும்.
பின் அதன் மேல் நறுக்கிய பீர்க்கங்காய், தக்காளியை பரத்தினாற் போல போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய் கலவையையும் அதன் மேலே சேர்க்கவும்.
வெந்து இறக்கிய பின், உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.


பீர்க்கங்காய் நீர் விட்டுக் கொள்ளும் காய் என்பதால் தண்ணீர் குறைவாக வைக்கவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால், இறக்கிய பின், பரிமாறும் பொழுது சிறிது பால் சேர்த்து, கிளறவும். ரொம்பவும் நெகிழ்வாக இருந்தால், 1 ஸ்பூன் பச்சரிசி மாவு அல்லது புளிக்காத தோசை மாவு 1 அல்லது 1.5 ஸ்பூன் கலந்து கொதிக்க விடவும். சரியாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்க பீர்க்காங்காய் தக்காளி கூட்டு செய்தேன் சப்பாத்திக்கு ரொம்ப அருமையா இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சில பீர்க்கங்காய்கள் கசப்பு சுவை உடையதாக இருந்தாலும் இருக்கும். சமைப்பதற்கு முன்னால், ஒரு சிறு துண்டு ருசித்துப் பார்த்து, பின் சமைக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா உங்களுடைய குறிப்பை அடிக்கடி செய்கிறேன் மிக எளிமை சுவை அபாரம் இந்த கூட்டு செய்யும் பொழுதெல்லாம் என்னவர் சீதாம்மா வாழ்கன்னு சொல்லுவார் :)
உங்க குறிப்புகள் எல்லோருக்கும் செய்ய எளிமையாவும் பொருட்களும் குறைவாகவும் இருக்கும் வகையில் இருப்பது மிக சிறப்பு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா, எனக்கும் உங்களிடம் பேசியதில் மிகவும் சந்தோஷம். இந்த கூட்டு செய்வதற்கு எளிதாகவும் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.