தேங்காய் திரட்டுப் பால் சமையல் குறிப்பு - 1089 | அறுசுவை


தேங்காய் திரட்டுப் பால்

food image
வழங்கியவர் : வசந்தா குமாரி செல்வராஜ்
தேதி : ஞாயிறு, 02/04/2006 - 16:28
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : ஒரு மணி நேரம்
பரிமாறும் அளவு : 10 நபர்களுக்கு

 

 • தேங்காய் - 2
 • பயத்தம்பருப்பு - 100 கிராம்
 • வெல்லம் - அரை கிலோ
 • நெய் - 4 தேக்கரண்டி
 • ஏலக்காய் - 5
 • முந்திரி - 25 கிராம்

 

 • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
 • துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.
 • கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். முந்திரியை வறுத்து போடவும்.
 • இதுவே தேங்காய் திரட்டிப்பால். இது சுவைமிகுந்த பாரம்பரிய உணவு.