இறால் கத்திரிக்காய் குழம்பு

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 4- -6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

இறால் - கால் கிலோ
பிஞ்சி கத்திரிக்காய் - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 3 (விருப்பப்பட்டால்)
வெங்காயம் - 2
தக்காளி - 2
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
மல்லி பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி, கறிவேப்பிலை
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

இறாலை உரித்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மல்லி இலை கட் செய்து வைக்கவும். தேங்காய், முந்திரி அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.
கத்திரிக்காய் வதங்கியவுடன், தக்காளி, உப்பு, சில்லி பவுடர், மல்லி பவுடர், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
பின்பு இறால் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும். நன்றாக மசாலா வாடை அடங்கி இறால் வெந்தவுடன் அரைத்த தேங்காய் சேர்த்து கொதி வந்து, மல்லி இலை தூவி சிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்.
சுவையான கமகமக்கும் இறால் கத்திரிக்காய் குழம்பு ரெடி.


இது சாதம், சப்பாத்தி, தோசை, ஆப்பம் உடன் சாப்பிடலாம். அதில் உள்ள கத்திரிக்காய் இறாலை விட ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வித்தியாசமாக செய்து பார்க்க என்று செய்தது... மிகவும் ருசியாக இருந்தது... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இறால் கத்தரிக்காய் குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது.நான் தேங்காயும்,முந்திரியும் சேர்க்கவில்லை.சிறிது பால் சேர்த்தேன். உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.