கச்சோரி

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மேல் மாவுக்கு :
----------------------
மைதா - 2 கப்,
உப்பு - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.

பூரணத்துக்கு:
-----------------
பாசிப்பருப்பு - 1கப்,
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி,
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பொரிக்க:
--------------
எண்ணெய் - தேவையான அளவு.


 

மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து, ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வற்ரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்புத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி கடலை மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
வாசனை வரும் போது வெந்த பருப்பு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு மசித்து கிளறவும்.
விழுதாக வந்ததும் இறக்கி, ஆறவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பூரணம் ரெடி.

பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சின்ன சின்ன வட்டமாக தேய்க்கவும்.
அதனுள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பூரண உருண்டையை வைத்து மூடி உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து லேசாக அமுக்கி லேசாக தட்டையாக்கவும்.
எண்ணெயை காய வைத்து, செய்து வைத்திருக்கும் கச்சோரிகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு தீயில் பொரிக்கவும். விருந்துகளில் பரிமாற வெகு ரிச்சாக இருக்கும். புதினா இனிப்பு சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்