கச்சோரி

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூரணம்

1. உளுந்து (தோல் இல்லாதது) - 200 கிராம்
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
4. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
5. உப்பு
6. பெருங்காயம் - 1 சிட்டிகை
7. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
8. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
9. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

மாவு:

1. கோதுமை மாவு - 1/2 கிலோ
2. உப்பு
3. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
4. தேவையான தண்ணீர்


 

மாவை உப்பு கலந்து பிசைந்து வைக்கவும்.
உளுந்தை 5 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
இதில் அரைத்த உளுந்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி விழுது எல்லாம் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளரவும்.
மாவை உருண்டைகளாக எடுத்து, சின்ன பூரி போல் தேய்க்கவும்.
இதில் 1 மேஜைக்கரண்டி பூரணம் வைத்து மூடி மீண்டும் பூரி போல் தேய்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.


உருளைக்கிழந்கு குருமா போன்றவையுடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்