தேங்காய் லட்டு (மற்றொரு வகை)

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தேங்காய் துருவல் - 150 கிராம்
2. வெல்லம் - 300 கிராம்
3. தண்ணீர் - 1/4 கப்


 

வெல்லத்தில் நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளரவும்.
தேங்காய் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து உருண்டை பிடித்து பார்க்கவும், பிடிக்க வந்தால் எடுத்து விடவும்.
உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.


உருண்டையாகவே செய்ய பிடிக்கவில்லை என்றால் மில்க் பேடா போல் செய்யலாம், பார்க்கவும் அழகாக இருக்கும். அடுப்பில் அதிக நேரம் இருக்க இருக்க லட்டு கெட்டியாகி கொண்டே போகும், அதனால் உங்களுக்கு எந்த பதத்தில் இருந்தால் பிடிக்குமோ அவ்வளவு நேரம் வைத்து கிளரி எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்