ஆலு கேப்ஸிகம் மசாலா

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ஆலு (உருளை) - ஒன்று பெரியது
கேப்ஸிகம் - மூன்று
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - கால் கப்
டொமேட்டோ பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - இரண்டு


 

ஆலுவை தோல் சீவி சதுர துண்டுகளாக வெட்டவும். அதே போல் கேப்ஸிகமையும் வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தையும் பெரிய துண்டுகளாக ஆறாக வெட்டவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் எண்ணெய் ஊற்றி ஆலுவை நன்கு வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயோடு மீதி எண்ணெயும் சேர்த்து பெரியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சதுரமாக வெட்டிய கேப்ஸிகமையும் போட்டு வதக்கவும்.
பிறகு சில்லிபவுடர், உப்பு தூள் சேர்த்து வதக்கி டொமேட்டோ பேஸ்டையும் சேர்த்து வதக்கவும்.
தனியாக வறுத்து வைத்துள்ள ஆலுவையும் சேர்த்து பிரட்டி கெட்சப் சேர்த்து இறக்கவும்.
சுவையான வித்தியாசமான டிஷ். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று டின்னருக்கு உருளை குடைமிளகாய் (சப்பாத்திக்கு -புல்கா) செய்யும் போதே பொறுக்க முடியாமல் பாதி சாப்பிட்டுவிட்டேன் அவ்வளவு சுவையாக இருந்தது. மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அவர்களுக்கு ஆலு கேப்சிகம் செய்து பார்த்ததும் இல்லாமல் பின்னூட்டமும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

இதே போல் இன்னும் ஒன்று ஆலு காலிபிளெவர் இருக்கும் அதுவும் ரொம்ப செய்வது ரொம்ப சுலபம் முயற்சித்து பாருங்கள்.

காலிபிளெவர் தனித்தினா எடுத்து சாப்பிட ரொம்ப நல்ல இருக்கும்

Jaleelakamal