மின்ட் ரொட்டி

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. கோதுமை மாவு - 2 கப்
2. புதினா - 1/2 கப்
3. கொத்தமல்லி - 1/4 கப்
4. பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
5. உப்பு
6. நெய்
7. எண்ணெய்


 

மாவில் உப்பு கலந்து வைக்கவும்
கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
இதை மாவுடன் கலந்து, தேவைக்கு தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.
இதை வழக்கம் போல் சப்பாத்தியாக திரட்டி, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


இதே போல் மைதா மாவு, கடலை மாவு, ராகி மாவிலும் செய்யலாம். உருளைக்கிழங்கு பொடிமாஸ், மசாலா போன்றவையுடன் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மின்ட் சப்பாத்தி கேட்க்வே நல்ல இருக்கு

இந்த சப்பாத்தி படத்தை நீங்களே இனைத்தீர்களா?
நானும் எல்லா போட்டோவும் எடுத்துவைத்துள்ளேன் ஆனால் இனைக்க முடியல.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா... ஏன் படம் சேர்க்க முடியல?! நான் imageready'ல் optimize குடுத்து அளவை குறைத்து சேர்த்தேன்(I have changed 640X480 with 137 KB size image to 160X250 with 5 KB image). நீங்கள் முயர்ச்சி செய்து பாருங்கள்.

- வனிதா

"இதுவும் கடந்து போகும்"

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
எப்படி இருங்கிங்க? படம் மிகவும் நன்றாக இருக்கின்றது.
உங்கள் உதவியால் நானும் படம் சேர்த்து விட்டேன்.

வனிதா எப்படியிருக்கீங்க? யாழினிக்குட்டி சுகமா? "யாழினி" மிகவும் அழகான பெயருப்பா.

டின்னருக்கு மின்ட் ரொட்டி செய்தேன், சூப்பராயிருந்துச்சுப்பா. வெந்நீர் விட்டு மாவு கலந்தேன், சாஃப்ட்டாக வந்திருந்தது, எல்லோரும் எஞ்ஜாய் பண்ணி சாப்பிட்டோம். நன்றிப்பா.

உங்களோடு பேசி நீண்ட நாளாகிறது, எங்கே போனீர்கள். நம்மிருவருக்கும் டைம் டிஃப்பரென்ஸூம் ஒத்து வருவதில்லையென நினைக்கிறேன். காலையில் பார்க்கும் போது எங்காவது ஓரிடத்தில் உங்கள் பதிவைப் பார்ப்பேன். எனக்கு அறுசுவையின் முதல் தோழி நீங்கள்தான், அதனால் தினமும் உங்களை நினைப்பேன். (இது அரட்டைப் பக்கமில்லை என்று நீங்கள் சொல்வது கேக்குது........ ஜூட்)

அன்புடன்:-)..........
உத்தமி:-)

மிக்க நன்றி உத்தமி. ரொட்டி செய்யாம அரட்டை அடிச்சிருந்தா தானே நீங்க சொல்றதெல்லாம், அதான் செய்துட்டீங்களே. :) ரொம்ப சந்தோஷம். நானும் அடிக்கடி மாவு பிசையும்போது மாற்றுவேன். சில நேரத்தில் பால் கூட சேர்ப்பேன். நீங்களும் முயர்ச்சி செய்து பாருங்கள்.

என்னை தினமும் நினைக்கிறதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, அடுத்தமுறை முயற்சிக்கிறேன்ப்பா.
நன்றிப்பா:-).....

அன்புடன்:-)..........
உத்தமி:-)

மணமாக நல்ல இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மின்ட் ரொட்டி சூப்பரா வந்தது வனிதா. ராய்த்தா பாலக் பனீருடன் சாப்பிட அருமையோ அருமை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ம்ம்... பாலக் பன்னீர்... ;) எனக்கு கொஞ்சம் அனுப்பி இருக்கலாம். மிக்க நன்றி இலா. இந்தமுறை பட்டம் வாங்கிடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா