சாத வடாம்

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : செவ்வாய், 20/01/2009 - 23:10

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • அரிசி - 1 கிலோ,
  • சின்ன வெங்காயம் - அரை கிலோ,
  • பச்சை மிளகாய் - 20,
  • மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி,
  • முழு பூண்டு - 2,
  • கறிவேப்பிலை - 2 கைப்பிடி,
  • உப்பு - தேவையான அளவு.

 

  • வெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும்.
  • பூண்டை தோலுரித்து நசுக்கி வைக்கவும்.
  • கறி வேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • அரிசியை கழுவி, 10 தம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4, 5 விசில் விட்டு, குழைய விட்டு இறக்கவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி, வெயிலில் ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் காய வைக்கவும்.
  • ஒரு வாரம் போல் ஈரம் போகும் வரை நன்கு காய விட்டு சேகரித்து வைக்கவும்.

Note:

தேவையான போது எண்ணெயில் பொரித்து, சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ள மட்டுமன்றி மாலையில் பகோடா போலும் சாப்பிடலாம்.







அக்கா,இதோடு கொஞ்சம் சீரகம் சேர்த்தா நன்றாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிஞ்சிய சாதத்தை என்ன செய்யலாம்னு செக் பண்ணும் போதுதான் உங்க குறிப்பு கிடைச்சுது செய்து பாத்துகிட்டு சொல்றேன் குறிப்புக்கு ரொம்ப நன்றி