ஈசி கருவாடு வதக்கல்

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீலாக்கருவாடு - 100 கிராம்
மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - கால் கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

சீலாக்கருவாடை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கவும்.
வெங்காயம், மிளகாய் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, கருவாடு சேர்த்து கிளறி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். உப்பு சேர்க்க தேவையில்லை.
சுவையான கருவாடு வதக்கல் ரெடி.


இது கஞ்சி, பழைய சாதம், சுடு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

thank to joind your side