கேழ்வரகு கஞ்சி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் உப்பு சேர்த்து சுடாக அருந்தவும்.
மிகவும் அருமையாக இருக்கும் இந்த கேழ்வரகு கஞ்சி.


உடலிற்கு மிகவும் நல்லது. எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த கஞ்சியினை சுடாக அருந்தவும்.

மேலும் சில குறிப்புகள்