பச்சை கலர் மோர்

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 5 இலை
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் தயிர், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடைசியில் சிறு ஐஸ் கட்டிகள் சேர்த்து இத்துடன் அருந்த மிகவும் அருமையாக இருக்கும். குளிர்ச்சியும் கூட.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா வாசனையான மோர்.நன்றாக இருந்தது.ஆசையை அடக்க முடியாமல் குடித்து விட்டு மாத்திரை போட்டுக்கிட்டேன் கீதா.

மேனகா,
மிகவும் நன்றி. குழந்தை எப்படி இருக்கின்றாள்? ஏன் மாத்திரை எடுத்து கொண்டிர்கள்? உங்களுக்கு உடம்பு முடியல்லையா?
பார்த்து கொள்ளுங்கள்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல்,
நேற்று ஈவினிங் உங்க பச்சை கலர் மோர் ட்ரை பண்ணினேன். சும்மா சூப்பரா நல்லா வாசனையா இருந்தது. நான் இதில நீங்க சொன்னதெல்லாம் போட்டு, கூடவே 4 கருவேப்பிலை இலையும் போட்டுகிட்டேன். அவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு ரொம்ப சூடு உடம்புதான், சம்மர் வேற நெருங்கிட்டு வருது. இந்த குறிப்பு நல்லா உபயோகப்படும் அப்போது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.
அன்புடன்,
கீதா ஆச்சல்