வேர்க்கடலை சட்னி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்ந்த வேக்கடலை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிய துண்டு
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 4 இலை


 

முதலில் ஒரு கடாயில் வேக்கடலையை போட்டு 2 - 3 நிமிடம் வறுக்கவும்.
பின்பு வறுத்த வேர்க்கடலை ஆறவைத்து தோலினை உரித்து கொள்ளவும்.
பின் தோல் நீக்கிய வேர்க்கடலை, புளி, பச்சை மிளகாய் மற்றும் உப்புடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடுகு, கறிவேப்பில்லை எண்ணெயில் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையில் கொட்டவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்


வறுத்த வேர்க்கடலையில் இருந்து தோலினை கையை வைத்து அழுத்த வந்துவிடும். இப்படி தோலினை நீக்கி வைத்து கொண்டால் திடீர் என்று வரும் விருந்தினர்களை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
வழங்கியவர்

மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு இந்த சட்னி ரொம்ப பிடிக்கும். நேற்று செய்து சாப்பிட்டாச்சு.நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

மிகவும் நன்றி செல்வி.
அன்புடன்,
கீதா ஆச்சல்