ஸ்பைசி ரைஸ்

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பீன்ஸ், காரட் - 150 கிராம்
முட்டை கோஸ் - 150 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
அரிசி - 2 கப்
காய்ந்த மிளகாய் - 5(விழுதாக அரைக்கவும்)
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்


 

காய்கறியையும், வெங்காயம், பூண்டையும் நறுக்கி வைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊறவிடவும்.
அரிசியை குக்கரில் 2.5 மடங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த சாதம் உதிரி உதியாக ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேண்டும்.
ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டை பொன்னிறமாக வதக்கவும்.
மிளகாய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவிடவும்.
காய் வெந்தது சாதத்தை சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்