வேகவைத்த வெங்காய சட்னி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சின்ன வெங்காயம் - 20
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/4தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1கொத்து
தாளிக்க:
எண்ணெய் - 1தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


 

சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஆறியதும் தேங்காய், வேகவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். சட்னி தயார்.


இந்த சட்னி கொஞ்சம் தளர்த்தியாக இருக்கும். கெட்டியாக வேண்டுமென்றாலும் கெட்டியாக அரைக்கலாம். இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்லா இருக்கீங்களா..உங்ககிட்டபேசி ரொம்பநாளாச்சு... இந்த சட்னியில வாசனைக்கு பூண்டு சேர்த்துக்கலாமா...?

ஹாய் பரி நலமா? நான் பூண்டு சேர்த்ததில்லை பரி.சேர்த்தால் சட்னியின் வாசனை மாறிவிடும். நான் பூண்டு சேர்த்து செய்து பார்த்துட்டு உங்ககிட்ட சொல்ரேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வேகவைத்த வெங்காய சட்னி தோசைக்கு செய்தேன்,நல்லா இருந்தது,நன்றி கவி