பட்டன்களில் தோடு செய்வது எப்படி?

தேதி: January 21, 2009

5
Average: 4.2 (5 votes)

இந்த பட்டன் தோடை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

அழகிய சிறிய பட்டன்கள்
தோடு செய்வதற்கான க்ளிப்புகள்
ஹாட் க்ளு கன் (hot glue gun)
குரடு

 

தோடு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சோடியாக உள்ள 2 பட்டன்களை எடுத்து பின்புறம் உள்ள வளையங்களை குரடினால் நறுக்கி எடுத்து விடவும்.
ஹாட் க்ளு கன்னின் உதவியால் க்ளிப்புடன் பட்டனை ஓட்டிக் கொள்ளவும்.
அணியும் ஆடைகளில் உள்ள மாதிரியான பட்டன்களைத் தேர்வு செய்து அதில் செய்தால் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் இமா,
படங்களைப் பார்த்ததும் உங்கள் கைவினை என்று நினைத்தது சரியாகி விட்டது. தோடு மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
செபா.

சிம்பிள் ஐடியா.ஆனால் அருமை!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

நன்றி உத்ரா & செபா. எத்தனையோ முறை முயன்றும் படம் இதற்குமேல் நன்றாக வரமாட்டேன் என்றது. என்ன பிழை என்று புகைப்படக்கலை தெரிந்த யாராவது சொன்னால் உதவியாக இருக்கும். உண்மையில் தோட்டின் பாதி அழகுகூட இங்கு தெரியவில்லை. மனம் சோந்துபோய் அப்படியே அனுப்பிவிட்டேன்.
அட்மின்,
நீங்கள் இதை வெளியிட மாட்டீர்கள் என்று நினைத்தேன். வெளியிட்டமைக்கு நன்றி. மகிழ்ச்சி. எனக்கு உங்கள் டிப்ஸ் என்ன?
இமா

‍- இமா க்றிஸ்

அன்பின் இமா, கநாளைக்குப் பிறகு...:) எப்பிடி இருக்கிறீங்கள்? முகப்பு படம் பார்த்தவுடனேயே நினைத்தேன். இது உங்கடதான் எண்டு. மிகவும் அழகா இருக்கு. நானும் இதைப் போல செய்யுறனான். நான் சுப்பர் குளுவால் ஒட்டுறனான்.:) உங்களுக்கு மெயில் ஐடி விரும்பினால் தாறீங்களா. உங்கட தொப்பிகளும் செய்து போட்டன். படம் அனுப்புறன்.
-நர்மதா :)

இமா
இந்த தோடு செய்வதற்கு எளிமையாக தெறியுது. என் பெண்ணுக்கு சொல்லி கொடுக்கலாம் என்றிருக்கிரேன். தோடு செய்யும் கிளிப் என்றால் என்ன? எப்படி இருக்கும்?
சொல்லுங்களேன்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

வணக்கம்.
தோடு செய்வது மிகவும் சுலபமா இருக்கிறதே!இது காதில் துளை இல்லாதவர்களும் போடும் தோடு தானே?
நீங்க photo எடுக்கும் போது, light வெளிச்சம், camera மேல் படும்படி எடுத்த மாதிரி இருக்குது.நீங்க normal ஆன வெளிச்சத்தில், flash போட்டு எடுத்து பாருங்களேன்.

இது மிகவும் எளிய செய்முறையாக இருக்கிறது. அலுவலகத்தில் உள்ளவர்கள்தான் இந்த குறிப்பினை வெளியிட்டு இருக்கின்றார்கள். நான் இப்போதுதான் கவனிக்கின்றேன். :-)

Flash பயன்படுத்திதான் படத்தினை எடுத்திருக்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். பகலில் அறை வெளிச்சத்தில் ப்ளாஷ் இல்லாமல் எடுத்தால் போதுமானது. போட்டோஷாப்பில் வெளிச்சம் ஏற்றிக்கொள்ளலாம். இதுபோன்று ப்ளாஷ் ரிப்லெக்ட் ஆகியிருந்தால்தான் எடிட் செய்வது கொஞ்சம் சிரமம்.

உங்களுக்கு போட்டோ எடுக்க டிப்ஸ் எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை :-) இதுவரை நீங்கள் அனுப்பிய படங்கள் அனைத்தையும் நான் மிகவும் பாராட்டி இருக்கின்றேன். இதிலும் படங்களில் பெரிதாக குறை இல்லை. கடைசிப் படங்களில் தோடு மட்டும் பெரிதாக தெரியுமாறு எடுத்திருக்கலாம். மணி மாலைதான் முழுவதும் தெரிகின்றது. இங்கே எடிட் செய்தவர்கள் தோடு பெரிதாகவும், மணிமாலை கொஞ்சம் மட்டும் தெரியும்படி கட் செய்திருக்கலாம். அவர்களும் அப்படியே விட்டுவிட்டார்கள்.

நன்றி அட்மின். அன்று முதலில் ப்ளாஷ் இல்லாமல்தான் எடுத்தேன். அதைவிட இது நன்றாகத் தெரிந்தது. ஆனால் கவியும் நீங்களும் வெளிச்சத்தைப்பற்றி எழுதியிருப்பதால் இன்று கர்டின்ஸ் எல்லாம் மூடிவிட்டு (சம்மரில் என் வீட்டினுள் 'அறை வெளிச்சம்' அதிகம்.) தோடு மட்டும் பெரிதாகத் தெரிகிற மாதிரி எடுத்திருக்கிறேன். பரவாயில்லாமல் வந்திருக்கிறது. என் கமராவைப் பார்த்துவிட்டு ஒருவர் பீச் மோடில் (beach mode) எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். :-)
இனிமேல் மணிமாலை இல்லாமல் படம் எடுக்கிறேன். எடிட்டரைக் குறை சொல்ல வேண்டாம். :-) படம் திருப்தியாக வராததால் இங்கு இரண்டு குறிப்புகள் அனுப்பாமல் வைத்திருக்கிறேன்.
வேலைகளுக்கு மத்தியிலும் உடனே பதில் போட்டிருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் நர்மதா, எப்பிடி இருக்கிறீங்க? மகள் என்ன செய்கிறா? எனக்கு சுப்பர் க்ளூ மணம் கஷ்டமாக இருக்கிறது. ஐ டீ அட்மின் ஃப்ரீ ஆக இருக்கும் பொழுது வாங்கி எடுங்க. நானும் மீன் & கொக்கு செய்து வைத்திருக்கிறேன். ஆறுதலாக போட்டோ எடுத்து அனுப்புகிறேன்.
கிருத்திகா, அது விரித்து மூடுகிறமாதிரி, காதில் துளை இல்லாதவர்கள் போடக்கூடியதாக இருக்கும். வெள்ளி, தங்க நிறத்தில் க்ராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.
நன்றி கவி. இன்று எடுத்த படங்கள் கொஞ்சம் பரவாயில்லாமல் வந்திருக்கின்றன.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta