சுக்கினி ஸ்பினாச் கூட்டு

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கடலை பருப்பு (அ) பாசி பருப்பு - 1 கப்
2. ஸ்பினாச் - 1/2 கட்டு
3. வெங்காயம் - 1
4. சுக்கினி - 2
5. தக்காளி - 1
6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. சீரகம்
11. கறிவேப்பிலை
12. மிளகாய் வற்றல் - 2
13. உப்பு


 

சுக்கினி தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
ஸ்பினாச், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
குக்கரில் ஸ்பினாச், சுக்கினி, வெங்காயம், தக்காளி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான தண்ணீர் (அதிகம் வைக்க வேண்டாம்) சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து கரண்டியால் மசிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க விடவும்.
பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுக்கவும்.
இதில் மசித்த கூட்டு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடன் அப்பளம், சிக்கன் வறுவல்.... இன்னும் சுவை சேர்க்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கூட்டு ரொம்ப நன்றாக இருந்தது. ஆமாம் நிங்க எங்கு இருக்கிங்க தெரிஞ்சுக்கலாமா?

ரொம்ப நன்றி விஜி. :) ஏன் திடீர்ன்னு இந்த சந்தேகம்? நான் சிரியா'ல இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்லை வனிதா. உங்க ரெசிப்பிஸ் எல்லாம் ரொம்ப நன்றாகவும் சிம்பிளாகவும் இருக்கு. ஸுக்கினி இங்கு கிடைக்கிற காய் அதுதான் சரி நிங்களும் ஈஸ்ட் ஹோஸ்டா என்று தெரிந்துகொள்ள தான், நிங்க எங்கு இருக்கிங்க? என்று தெரியாதுப்பா? இப்ப ரிஞ்சுக்கிட்டேன்.

இப்போ தெரிஞ்சிடுச்சா எங்க இருகேன்னு??!! ஹிஹிஹீ. இந்த காய் பேரு தெரிஞ்சு இதை நம்ம ஊர் சமையல்ல கூட யூஸ் பண்ணலாம்னு தெரிஞ்சிக்கவே எனக்கு 2 வருஷம் ஆயிடுச்சு. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா