தஹி பிந்தி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

தயிர் - 1 கப்,
வெண்டைக்காய் - அரை கிலோ,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி - சின்ன துண்டு,
கொத்தமல்லி - 1 கட்டு,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

தயிர், வெண்டைகாயை தவிர எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிருடன் கலக்கவும்.
வெண்டைக்காயை காம்பையும், நுனியையும் வெட்டி, நீள வாக்கில் இரண்டாக பாதி வரை பிளக்கவும்.
அரைத்த மசாலாவை அதில் அடைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, மசாலா அடைத்த வெண்டைக்காய்களை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, மொறுமொறுப்பாக வரும் வரை வதக்கவும்.


சாதத்திற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்