வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 250 கிராம்
கார்ன் மாவு - அரை கப்
முட்டை - 1
மிளகாய் - 2
எண்ணெய் - 200 மில்லி
கோஸ் - ஒரு கப்
கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - பின்ச்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

கேரட், வெங்காயம், மிளகாய், கோஸ் பொடியாக கட் செய்து கொள்ளவும்.
மைதா, கார்ன்மாவு, முட்டை சேர்த்து கொஞ்சம் நீர் சேர்த்து குழைத்து வைக்கவும். அதனை மெல்லியதாக பரத்தி சுட்டு எடுத்து ஆற வைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, பொடியாக கட் செய்த வெங்காயம், கேரட், கோஸ், மிளகாய், வதக்கி சோயாசாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மிளகு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
சிறிது மைதாவை பேஸ்ட் மாதிரி நீரில் கரைத்து வைக்கவும்.
மெல்லியதாக சுட்டதின் மத்தியில் தயார் செய்து வைத்த காய்கறியை வைத்து நான்கு பக்கமும் மடித்து சுற்றி, ஓரங்களை மைதா பேஸ்ட்டால் ஒட்டி சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல் ரெடி.


இது நான் டீவியில் பார்த்தது. நன்றாக வரும், மிகவும் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளைக்கவரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம்,மைதா,கார்ன்மாவு,முட்டையெல்லாம் போடும் மாவில் உப்பு போட வேண்டாமா?நான் காயெல்லாம் வெட்டி ரெடியா வெச்சிருக்கேன் சாயந்தரம் செய்லாம்னு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் பதில் சொல்லுங்க.

உப்பு டைப் பண்ண மறந்து இருப்பேன்,நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.அருசுவை எரர் வருது,அப்புறம் சேர்த்து விடுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் நினைத்தேன் மேடம் மறந்திருப்பீஙன்னு நான் உப்பு போட்டுதான் செய்தேன்
சாப்பிட்டாச்சு,டேஸ்ட் நல்லா இருந்தது,ஆனா கொஞ்சம் கிரிஸ்பியா வரல,கொஞ்சம் மொத்தமா ஊத்திட்டேன் போலயிருக்கு,அடுத்த தடவை செய்யும் போது மெல்லிசாக ஊற்றி எப்படி இருக்குதுன்னு சொல்றேன். நன்றி.