இறால் பஜ்ஜி

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொருத்து

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

இறாலில் பிரட்ட:
இறால் - 15 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி (தேவைக்கு)
காஷ்மீரில் சில்லி பொடி - கால் தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - கால் தேக்கரண்டி
பஜ்ஜி மாவிற்கு:
கடலை மாவு - ஒரு கப்
முட்டை - ஒன்று
காஷ்மீரில் சில்லி பொடி - கால் தேக்கரண்டி
சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - அரைத்தேக்கரண்டி (தேவைக்கு)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

இறாலை சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து நன்கு கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
முட்டையில் காஷ்மீரி சில்லி, உப்பு, இறாலில் போட்டு பிரட்ட வேண்டிய மசாலாவை போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
பஜ்ஜிமாவில் கலக்க வேண்டியவைகளையும் கலக்கி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்
பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மீதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
முட்டை சேர்ப்பதால் நல்ல பொங்கி வரும். இதே போல் சிக்கனிலும் செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்