காராமணி கிரேவி

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை காராமணி - 1 கப்
தக்காளி - 3 வெங்காயம் - 1
சாம்பார்பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்


 

காராமணியை 1 மணி நேரம் ஊற வைத்து மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் இரண்டு விஸில் வரு வரை வேக விடவும். நீரை வடிகட்டிக்கொள்ளவும்.
தக்காளியை கொதி நீரில் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்ததும், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
வெந்த காரமாணியுடன் சிறிது நீர் சேர்த்து, உப்பு, சாம்பார் பொடியும் சேர்த்துக்கிளறி இன்னும் ஒரு விசில் வைக்கவும்.
இறக்கியதும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கிளறி சூடாக சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா, இக் குறிப்பு செய்வதற்கு எளிதாகவும் நன்றாகவும் இருந்தது. சப்பாத்தியுடன் சாப்பிட்டோம். நான் இங்கு கேனில் கிடைக்கும் ஒரு வகை பீன்ஸில் செய்தேன். வேலை சுலபமாக முடிந்து விட்டது. நன்றி உங்களுக்கு

இந்த காராமணி கிரேவி செய்வதர்கு சுலபமாகவும் நன்றாகவும் இருந்தது என்ற உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.செய்து,பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website