மட்டன் ராரா

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - 300 கிராம்
தக்காளி - 4
வெங்காயம் 3
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகாய் - 1 டீஸ்பூன்
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - சுவைக்கு


 

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, மிளகாய்தூள் சேர்க்கவும்.
சுத்தம் செய்த மட்டனை நிறம் மாறும் வரை வதக்கி, உப்பு, கரம் மசாலா சேர்த்து 1/4 கப்புக்கும் குறைவாக நீர் விட்டு, கிளறி 3 விசில் வைக்கவும்.
சூடாக இருக்கும் பொழுதே ஆய்ந்த கறிவேப்பிலையை சேர்த்துக்கிளறி இறக்கவும்.
நிறைய கிரேவி இல்லாமல் இருக்கும் சுவையான, காராசாரமான டிஷ்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா இதென்ன ரா ரா

லக லக லக ரா ரா ஹா ஹா ஹா ஹிஹிஹி

ஜலீலா

Jaleelakamal

ஐயோ உங்களின் இரண்டாவது வரிகளைப்பார்த்ததும்எனக்கு சிரிப்பு.எக்மோரில் ஆமிர் பிறந்த நாளைக்கு ஒரு சைனீஷ் ரெஸ்டாரெண்டில் உணவு வகைகள் வாங்கினோம்.மெனு கார்ட் பார்க்கும் பொழுது இந்த ரெஸிப்பி.சரி ஆர்டர் பண்ணலாம் என்று டேஸ்ட் பண்ணாமலே ஆர்டர் கொடுத்தோம்.சும்மா சொல்லக்கூடாது.உண்மையில் நன்றாக இருந்தது.டேஸ்ட் செய்து குத்து மதிப்பாக இப்படித்தான் செய்யலாம் என யூகித்து நானும் சமைத்து யான் பெற்ற சுவை அனைவரும் பெருக என அறுசுவையிலும் போட்டு விட்டேன்.ஒரிஜினல் ராரா சாப்பிட வேண்டு மென்றால் ஹோட்டல் பெயர் மெயில் பண்ணுகின்றேன்.சென்னை வரும் பொழுது போய் சாப்பிட்டு விட்டு லகலகலக என்று பாட்டுப்பாடுங்கள்.காரம் தாங்காமல்தான் ,:)
ஸாதிகா

arusuvai is a wonderful website

ple hotel name

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

சகோதரி,நீங்கள் ஹோட்டலின் பெயரை கேட்டதால் சொல்லுகின்றேன்.எக்மோர் மாண்டியத் சாலையில் உள்ள டிக்டாக் சைனீஷ் ரெஸ்டாரெண்ட்.அல்சாமாலுக்கு எதிர்பக்கம்,கேக்வாக் அருகில் இருக்கின்றது.அங்கு உணவு எல்லாமே நன்றாக இருக்கும்.ஹலால் ஃபுட் தான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா லக லகலக ரா ரா

இத பார்த்ததும் நான் தான் என்று கண்டு பிடித்து இருப்பீர்கள் இல்லையா?

நேற்று என் பகறா கானாவிற்கு உங்கள் மட்டன் ரா ரா செய்தேன் கொஞ்சம் காரமாகிவிட்டது, கெட்சப் சேர்த்து கொண்டேன்.

ஜலீலா

Jaleelakamal

இந்த தலைப்பு நீங்கள் போடும் பொழுது நான் லைனில் இல்லையே ஜலி.இருந்திருந்தால் கண்டிப்பாக கண்டு பிடித்திருப்பேன்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website