கத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. மனோகரி அவர்களின் குறிப்பினைப் பார்த்து <b> திருமதி. அதிரா </b> அவர்கள் தயாரித்த மைக்ரோவேவ் கத்தரிக்காய் பிரியாணியின் செய்முறை இது. பொருட்களின் அளவிலும், கால அளவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

பாஸ்மதி அரிசி - 200 கிராம்
கத்திரிக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
கறித்தூள் - 2 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய்பால்/பசும்பால் - 50 மில்லி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு - தலா இரண்டு
எண்ணெய் - 25 மில்லி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்புத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
சுடுத் தண்ணீர் - 300 மில்லி


 

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கிராம்பு, கறுவா போட்டு ஓவனில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 4 நிமிடங்கள் வேக விடவும்.
வெங்காயம் வெந்ததும் அதனுடன் கத்திரிக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மூடி ஓவனில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
இப்பொழுது கத்திரிக்காய் அரை வேக்காடு வெந்திருக்கும் நிலையில் அதில் தக்காளி, தயிர் மற்றும் அரிசியை தண்ணீரில்லாமல் வடித்தெடுத்து போட்டு பாலையும் ஊற்றி கலந்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
பின்பு அதில் கறித்தூள், கரம் மசாலா மற்றும் மீதமிருக்கும் உப்பையும் போட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவும். 5 நிமிடங்களுக்கொரு முறை திறந்து கிளறி விட்டு பின் வேக விடவும். (மூடி போட்டு வேக விடவும்).
இறுதியில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி மேலும் 3 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார். மைக்ரோவேவிலேயே ஒரு நிமிடத்தில் பொரித்த பப்படத்தோடு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா
நல்ல வடிவா செய்திருக்கிறீங்கள். இருந்தாலும் அட்மின் மேலே கீழே எல்லாம் "கட்" பண்ணிட்டார்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வடிவா இருக்கு உங்க குறிப்பு .நான் கூட என்னடா பிரியாணிக்கு சைட் டிஷ் ஐஸ் க்ரீமா அப்ப அதை விட கூடாதேன்னு வந்தேன்..அப்ப தான் அப்பளம்னு தெரிஞ்சது.வெரி குட்.

தளிகா
நான் பப்படத்தை இப்படி வைக்கலாமா, அப்படி வைக்கலாமா என பல வழிகளில் முயற்சித்து முடிவில் பக்கத்திலேயே வைத்துவிட்டேன். உண்மையில் மிகவும் சுவையான பிறியாணி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பார்க்க மட்டன் பிரியாணி போல் இருக்கு.கத்திரிக்காய் பிரியாணியும் சுட்ட அப்பளமும் நல்ல காம்பினேசன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹா ஹா அதிரா நானும் இதை ஐஸ்கிரீம் எண்டு தான் நினைத்தேன்.
பார்த்ததும் ஒன்றும் புரியல.
ஹி ஹி சூப்பர்........

ஜலீலா

Jaleelakamal

அதிரா பார்க்கவே சூப்பரா இருக்கு. என்னிடமும் ஒரே ஒரு கத்திரிக்காய் தனியா இருக்கு. செய்ய தோணுது உங்க படம் பார்க்கும் போது. மெயில் அனுப்பி இருக்கேன்
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

முதல்ல சின்ன பிள்ளைதனமா கேட்கிறேனு நினைக்காதீங்க..நீங்க சொன்ன கறித்தூள் என்றால் என்ன? நான் கரம்மசாலாவா இருக்கும்னு நினைச்சேன் ஆனால் அதும் சொல்லிருக்கீங்க, அப்புறம் கெட்டியான தேங்காய்பால்/பசும்பால் - 50 மில்லி சொல்லிருக்கீங்க.. 2ம் கலந்து 50மிலி யா?இல்ல தனிதனியாவா?இல்ல தேங்காய்பால்50மிலி,பசும்பால்50மிலியா?சொல்லுங்க.. பார்த்ததும் சாப்பிடனும்னு தோணுது.என் சந்தேகம் தீர்ந்ததும் செய்யனும்பா..

சந்தோ ஒரிஜினல் ரெஸிபியும் பாருங்க. அதில கறித்தூளுக்கு பதில கரம் மசாலா பால்+தேங்காய்பாலுக்கு பதில் தேங்காய்பால். பாவம் அதிரா தேங்காய்பால் தீர்ந்து இருந்திருக்கும் இல்லை இது கொஞ்சமும் குறைந்த கொழுப்புள்ளதாக்கி இருக்காங்க.
http://www.arusuvai.com/tamil/node/8767

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கத்தரிக்காய் பிரியாணி பார்க்கும் போதே சுவைக்க தோன்றுகிறது. இந்த வாரம் கண்டிப்பாக செய்து பார்ப்பேன். ரொம்ப ஈஸி மெத்தேடாக இருக்கு. வித்தியாசமான ரெசிப்பி. நானும் ஐஸ்க்ரீம் என்றே நினைத்தேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தேங்காய்பால் அல்லது பசும்பால் ஏதாவது ஒன்று 50 ml யூஸ் பண்ண வேண்டும்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ரொம்ப தேங்ஸ்பா, ஆனால் எனக்கு இன்னும் doubt தீரல,அப்போ கரம்மசாலாவும்,கறித்தூளும் ஒன்னுதானா? இல்ல இது இல்லனா அது யூஸ் பண்ணலாமா? தேங்காய்பால் சந்தேகம் தீர்ந்தது நன்றி..

ஆகா இங்கே என்னவெல்லாம் நடக்கிறதே (என்னைத்தவிர),
ஆஸியா உண்மையில் செய்த உடனேயே முடிந்துவிட்டது.

ஹா...ஹா.. ஹா... ஜலீலாக்கா... உங்களுக்கு இன்றுமுதல் ஹா...ஹா..ஹா ஜலீலாக்கா என பட்டம் சூட்டுகிறேன். என்ன இது ஐஸ்கிறீம்போல் இருக்கென்றுதான் தளிகாவும், தனிஷாவும் சொல்கிறார்கள் .... பப்படத்துக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது.

செய்யுங்கோ இலா... ஈசி மெதேட் தானே.. இனித்தான் மெயில் பார்க்கப்போறேன்.

சந்தோ என்னுடைய குறிப்பில் கறித்தூளுக்கு விளக்கம் கொடுத்தே களைத்துவிட்டேன். இலங்கைக் குறிப்பில் நர்மதா கொடுத்திருக்கிறார் பாருங்கள். இல்லாதுவிட்டால் மனோகரி அக்காவின் குறிப்பில் பாருங்கள் புரியும்(இலா சொன்னதுபோல்), அதாவது இந்தியாவில் நீங்கள் ஒவ்வொரு தூளையும் தனித்தனியாக வைத்துப் பாவிப்பீங்கள் நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து வைத்து உறைப்புக் கறிகளுக்குப் பாவிப்போம் அவ்வளவுதான்.

கீழே அமரக்பரந்தோனிக்குப் புரிந்துவிட்டது.... இலாவுக்கும் புரியவில்லை, "/" இந்தக் குறியீடு போட்டால் "அல்லது" என்றுதான் அர்த்தம். வெளிநாட்டில் அநேகமானவர்கள் இப்போ தேங்காய்ப்பால் பாவிப்பதில்லை அதில் கொழுப்பு அதிகம் என்று, பசுப்பால்தான் கறிகளுக்குப் பாவிக்கிறார்கள். நானும் அப்படித்தான்(ஆனால் ஆடு, கோழி எல்லாம் முழுசா உள்ளே போகும் - அதில் கொழுப்பில்லைத்தானே:) ) இலா கரெக்ட்டா கண்டு பிடித்திருக்கிறீங்கள். இப்போ புரிந்ததா சந்தோ செய்யுங்கோ.

தனிஷா நிட்சயம் செய்துபாருங்கள்.

நன்றி அமரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தோ, கரம் மசாலா வேறு கறித்தூள் என்பது வேறு, உறைப்புக்காக சேர்ப்பது. கரம்மசாலா வாசத்துக்காகத்தானே சேர்க்கிறோம். இப்போ புரிந்துவிட்டதோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நானும் சரியா கவனிக்கலை.. இதுக்கு தான் கேள்விய முடிக்காமா பதில் சொல்ல கூடாதுன்னு சின்ன பிள்ளையா இருக்கும் போது ரீச்சர் சொன்னது காதுல ரீங்காரமிடுது.

நானும் அப்படித்தான்(ஆனால் ஆடு, கோழி எல்லாம் முழுசா உள்ளே போகும் - அதில் கொழுப்பில்லைத்தானே:) )
// LOL :))
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னடா, இலா புரிய வைப்பதற்க்கு பதில் இப்படி இன்னும் குழப்பியுள்ளாரே என்று நினைத்தேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

குழம்பின குட்டையில தான் மீன் பிடிக்க முடியும். இப்ப பாருங்க சந்தோவும் அதிராவும் தூக்கதில எழுப்பி கேட்டாலும் மனப்பாடமா சொல்வாங்க..

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்று உங்களின் கத்தரிக்காய் பிரியாணி செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது, நன்றி,

றிஹானா , செய்துபார்த்து பின்னூட்டமும் தந்ததற்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்