சிக்கன் பால் பிரியாணி

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி - 1/2 கிலோ
2. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
3. பசும்பால் - 1 1/2 கப்
4. பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
5. தயிர் - 2 தேக்கரண்டி
6. உப்பு
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
9. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
10. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
11. கொத்தமல்லி, புதினா
12. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
13. தண்ணீர் - 1 1/4 கப் (அ) 1 1/2 கப் (அரிசியை பொருத்து)
14. பச்சை மிளகாய் - 2
15. எண்ணெய் + நெய் - 1 குழிக்கரண்டி
16. வெங்காயம் - 1
17. தக்காளி - 1


 

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
கோழி சுத்தம் செய்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீரி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.
பின் கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.
இதில் ஊற வைத்த கோழி சேர்த்து மூடி வேக விடவும்.
கோழி வெந்ததும் பால், தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும்.
முக்கால் வெந்ததும் 20 நிமிடம் தம்மில் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Madam ,

நான் கொரியால இருக்கேன்... நேற்று உங்கள் கோழி பால் பிரியாணி செய்தேன்.... ரொம்ப tastea வந்துச்சு.... இத்தனைக்கும் எனக்கு சமைக்கவே தெரியாது... இப்பதான் அப்ப அப்ப பழகுறேன்...... அறுசுவை இணையத்திற்கும் என் நன்றிகள்.....

Dear Vanitha Ma'am, I am planning to try this recipe this week but have a small doubt. I usually cook in the evenings and use the same for lunch the next day. But since we add milk in this recipe, will it stay good for the next day also (after refrigeration only)?
Please reply. Otherwise I will try this in the weekend.

Thanks.
Bindu Vinod

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி. எனக்கு தாங்கும்னு தோணல :) ஏன்னா வெச்சு அடுத்த நாள் காலைன்னா கூட பரவாயில்லை.. இது மதிய உணவுக்கு நிச்சயம் தாங்கும்னு சொல்ல முடியாது. அதனால பெட்டர் நீங்க வீகெண்ட்’ல செய்து உடனே முடிக்குற மாதிரியே ப்ளான் பண்ணுங்க. அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. :)

அப்படியே கூடவே மேடம் எல்லாம் வேண்டாம் பிந்து... வனிதான்னு கூப்பிடுங்க போதும். :) தோழிகள் அப்படி அழைத்தால் நல்லா இருக்காது தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றிங்க வனிதா. என் கணவரும் இதே தான் சொன்னார் எனக்கு தான் ஒரு ஆர்வ கோளாறு :) இந்த சனி கிழமை கட்டாயம் செய்து பார்க்க போறேன். எப்படி வந்துச்சுன்னு சொல்றேன்.

தமிழில் அடிக்கும் போது ஒரு 'ங்க' சேர்த்துக்கலாம் ஆனால் ஆங்கிலத்தில அடிக்கும் போது வெறும் பேர் போடுறதால கொஞ்சம் மரியாதை குறைவா தோணிச்சு.. அது தான் இந்த மேடம் என்ற இடை செருகலுக்கு காரணம்.

அப்புறம் ஒரு எக்ஸ்ட்ரா தேங்க்ஸ்ங்க என்னை தோழின்னு சொன்னதுக்கு :D

BTW, நான் சமையலுக்கு ரொம்ப புதுசு, அதனால அப்பப்போ ஏதாவது silly / stupid / simple கேள்வி எல்லாம் கேட்டால் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பதில் சொல்லுங்க.

நன்றிங்க.

- பிந்து வினோத்

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அச்சச்சோ... பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க ;) நாங்களும் உங்களை போல புதுசா இருந்து வந்தவங்க தான்... நான் சமைக்க ஆரம்பிச்சும் 6 வருஷம் தான் ஆகுது :) அதனால கோவிக்கவே மாட்டேன்... நிறைய கேளுங்க, நிறைய கத்துக்கங்க... சீக்கிரமே நீங்களும் இங்க குறிப்புகள் தரணும், நாங்க சமைக்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ வனிதா, செஞ்சு பார்த்துட்டு இங்கே பதில் போடலாம்னு நினைச்சேன்.. ஆனால் இந்த வீக் என்ட் லாங் வீக் என்ட்... அதனால் சமையல் இல்லை :) அடுத்த வீக் என்ட் கட்டாயம் செய்கிறேன்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி :) சாரிங்க நான் இத்தனை நாளா இதை பார்க்காம விட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சொல்கிறேன் என்று தப்பா எடுக்க கூடாது ஒரு கப்புக்கு அரை கிலோ கறி எறால் சாதமே தெரியாதே மட்டனா இருக்குமே?
ஜலீலா

Jaleelakamal

தப்பா நினைக்க ஒன்னும் இல்லை... மாத்திடுறேன். நான் இன்று பயன்படுத்திய அரிசி நிறைய சாதம் ஆச்சு போல பாக்க என்னவோ சிக்கன் கம்மியா இருக்கிற மாதிரி தோனுச்சு. 1 1/2 பயன்படுத்தினேன். இப்பொ மாத்திட்டேன். :) நன்றி ஜலீலா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாளைக்கு எங்கவீட்ல இதான் செய்யப்போறேன் கடவுளை வேண்டிக்கோங்க நல்ல வரணும்னு.
நீங்க இப்ப லைன்ல இருக்கீங்களா உங்களுக்காக நான் வெய்ட்டிங்...ல்

அடடா பரி... சாமி'ட சொல்லிடேன், கண்டிப்பா நல்லா வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் சிக்கன் பால் பிரியாணி மிகவும் சுவையாக இருந்தது.வீட்டில் நல்ல பாராட்டு ரொம்ப நன்றி. இப்படி சுவை வரும் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.சூப்பர்
அன்புடன் அதி

மிக்க நன்றி அதி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்.
சிக்கன் பிரியாணி மிகவும் நன்றாக வந்தது.இதுதான் முதல் தடவை நான் சிக்கன் செய்வது. மிகவும் நன்றாக இருந்தது.முக்கால்வாசி வெந்ததும், சிறிது lemon பிழிந்துவிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.மிக்க நன்றி.

அன்பு கர்கவ் (கவிதா??), சமைத்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. முதன் முதலில் கோழி சமைக்கிறீர்களா?? அப்படி ஆனால் அவசியம் செட்டினாடு சிக்கன் பிரியாணி, நம்ம ஜலீலா சிக்கன் பிரியாணி, ஆசியா நெல்லை தம் பிரியாணியும் முயற்சி செய்யுங்க. எனக்கு பிடிச்ச பிரியாணி வகை இதுலாம். :) மீண்டும் உங்களுக்கு எனது நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்
கட்டாயம் அடுத்த வாரம் செய்துவிட்டு சொல்கிறேன். வாரம் ஒரு முறை பிரியாணி செய்யலாம்னு இருக்கிறேன்.மிக்க நன்றி

hay am new to dis site i read ur recipe its good method but i ve doubt y dont add coconut milk instead of cow milk. plz replzy me

Both will give a different flavor and taste. Try whichever you like.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank you for ur reply madam

shall i make dis recipe in rice cooker madam.

Yes you can cook in rice cooker.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா