மட்டன் குருமா

தேதி: January 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

ஆட்டிறைச்சி - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
தயிர் - 1/4 கப்
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்புக்கும் குறைவாக
பட்டை - சிறுதுண்டு
ஏலம் - 3
கிராம்பு - 3
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
கறிப்பொடி - 2 டீஸ்பூன் (அல்லது)
வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்த பவுடர்


 

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம் தாளிக்கவும்.
சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிளறவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இறைச்சி சேர்த்து நிறம் மாறு வரை வதக்கி, பச்சைமிளகாய், மல்லித்தழை, மசாலாதூள்கள் ஒவ்வொன்றாக சேர்க்கவும். தயிர் சேர்த்து கிளறவும்.
அரைத்த தேங்காய் விழுதுடன், 1 கப் நீர் சேர்த்து கிளறி மூன்று விசில் வைக்கவும்.
அடுப்பை அணைத்து 10 - 20 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால் எண்ணெய் மிதக்கும் சுவையான மட்டன் குருமா ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா நேற்று பகாறா கானாவிற்கு இந்த மட்டன் குருமா செய்தேன் மிளகாய் தூள் இல்லாமால் நல்ல இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலா,பின்னூட்டத்திற்கு நன்றி.காரமில்லாமல்,பிள்ளைகளுக்கு ஏற்ற குருமா இது.பையன் எப்படி படிக்கின்றார்.டென்ஷன் இல்லாமல் இருக்கின்றீர்களா?இப்போது லைனில் இருந்தால் வாருங்கள்.ஹாஸ்டல் பற்றி நீங்கள் கேட்ட தகவல் சேகரித்து வைத்து இருக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நான் திங்கள் அன்று இந்த குருமா செய்தேன்.நானும் இப்படித்தான் காரம் குறைவாக செய்வேன்.மதியம் சாதத்துக்கும்,இரவு இட்லிக்கும் நன்றாக இருந்தது.நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி

மிகவும் சந்தோஷம் செல்வி.உங்கள் பின்னூட்டங்கள் சந்தோஷத்தைத்தருகின்றது.ரொம்ப நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இதுவும் நான் இதுவரை செய்தது இல்லை. ஒரிசா வந்ததில் அருசுவை மூலம் நிறைய ரிசிபிஸ் தெரிந்து கொண்டேன். இதுவும் சூப்பர். மிகவும் நன்றி

லதா

இப்படிக்கு
லதா

ஒரிசாவில் இருக்கின்றீர்கள்.மைனிங் துறையைப்பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்.மைனிங் எஞ்ஜினீயரிங் பற்றி சொல்லுங்களேன்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தற்சமயம் சுரங்க துறையில் யாரும் நண்பர்கள் இல்லை, மற்ற நண்பரின் மூலம் விசாரித்து பதில் எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி.முடிந்தவவரை விசாரித்து தெரிந்ததை சொல்லுங்களேன்.என் பையன் அந்த துறை எடுத்துப்படிக்கவே விரும்புகின்றார்.அவன் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website