பாண் ப்ரெட்

தேதி: January 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மா (All-Purpose Flour) - 3 கப்
ஈஸ்ட் - 3 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீனி - ஒரு தேக்கரண்டி


 

மாவை சலித்து சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள தண்ணீரில் சீனியை போட்டு கரைத்துக் கொண்டு அதனுடன் ஈஸ்டை போட்டு 5 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஈஸ்ட் நுரைத்து பொங்கி வரும்.
மற்றொரு பாத்திரத்தில் சலித்த மாவை போட்டு ஈஸ்ட் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு 10 நிமிடங்கள் பிசையவும்.
பின்னர் பிசைந்த மாவை பாண் அச்சியில் பரவினாற் போல் வைத்து 1 - 1 1/2 மணி நேரங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.
ப்ரெட் அச்சு இல்லாவிட்டால் சிறிய உருண்டைகளாக செய்து கேக் அச்சியினுள் வைக்கவும்.
அவனை 400 Fல் முற்சூடு செய்து வைக்கவும். அச்சியில் வைத்திருக்கும் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும், அதை முற்சூடு செய்த அவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சூடான சுவையான பாண் ப்ரெட் தயார். இதனை சம்பல், குழம்புடன் அல்லது பட்டர், ஜாமுடன் சாப்பிடலாம். இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்னைக்கு நான் இதை ட்ரை பண்ணினேன். ஆனா, கரெக்ட்டானு தெரியல. கொஞ்சம் ஹார்டா தான் வருமா. நீங்க படத்தில் காட்டியுள்ள கடைசி படம், பேக் பண்ணியதா. ஏன்னா, பேக் பண்ணிய பிறகும் கலர் இவ்ளொ வொயிட்டா இருக்கே அதனால் கேக்கிறேன்.
என்க்கு வாசனையெல்லாம் நல்லாவே வந்தது, பேக்கரி ஷாப்பில் வருவது பொல். பட் எனக்கு ஃசாப்டா இல்லதா மாதிரி ஒரு ஃபிலிங். இல்ல, எதும் ஸ்பெசல் இன்கிரிடியென்ஸ் இல்லாததால் இப்படிதான் வருமா.
இதுதான் முதல் ரெசிப்பி பேக்கிங்க் அயிட்டத்தில். இதன் ஈசினெஸ் பிளஸ் எனக்கு ஃபஸ்ட் டைம் எனபதால் இதை தேர்தெடுத்து செய்தேன். பழக்கப்பட்டபின் தான் ரிச்சானவற்றை செய்ய இருக்கிறேன்.
ஈஸ்ட் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தும் போங்கி வரவில்லை. ஆனால், கப்பில் மா நன்றாக பொங்கி வந்தது (2 மணி நேரத்தில்), பின்னர் தான் பேக் செய்தேன்.
ஊஊஊஊஊஊப்ஸ் மெனி மெனி டவுட்ஸ்...........

indira

அன்பின் இந்திரா தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அட்மின் இறுதி படம் இணைக்க மறந்திட்டார் என நினைக்கிறேன். மேற்பக்கம் பிரவுணாக வரும். மா நன்கு பொங்கி வந்தால் மென்மையாக இருக்கும். எனக்கும் மிக மிக மென்மையாக வரவில்லை. ஆனால் நன்றாகவே வந்தது. மறு முறையும் முயற்சியுங்கள். நானும் முடிந்தால் மீண்டும் செய்து போட்டு சொல்றன்.
-நர்மதா :)

தாமதமா பதிலுக்கு பரவாயில்லை. ரெண்டு நாளா வந்து வந்து பார்த்தேன் ரிப்ளை இருக்கானு. இல்லையென்றதும் விட்டுவிட்டேன்.
அப்படியா, கடைசி படம் மிஸ்ஸிங்கா.
நானும் படம் எடுத்து வச்சிருக்கேன். உங்க ஐடி மட்டும் என்கிட்ட இருந்திருந்தா அன்னைக்கே அனுப்பி கரெக்ட்டானு கேட்ருப்பேன். படத்தை பார்த்து விட்டு ஆசியாக்கா ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க.
நானும் இன்னொரு முறை ட்ரை பண்றேன். நீங்க சொல்றத பார்த்தா எனக்கு வந்தது கரெக்டோன்னு தோணுது.

indira