தேங்காய் - தயிர் சட்னி

தேதி: January 23, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

தேங்காய் - 1 மூடி,
தயிர் - 1 கப்,
இஞ்சி - ஒரு துண்டு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

தேங்காயை நைசாக துருவவும்.
இஞ்சியை தோல் சீவி நைசாக அரைக்கவும்.
தயிருடன் தேங்காய் துருவல், அரைத்த இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.


சப்பாத்திக்கும் கலந்த சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்