பிரட் பால் டோஸ்ட்

தேதி: January 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பிரட் ஸ்லைஸ் - 10,
பால் - 250 மில்லிகிராம்,
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி,
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
உப்பு கலந்த வெண்ணெய் - 50 கிராம்.


 

பாலை காய்ச்சி, சூடாக இருக்கும் போதே சர்க்கரை சேர்த்து கலக்கி அகலமான தட்டில் ஊற்றி, எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, வெண்னெய் சிறிது போட்டு உருகியதும் பிரட் ஸ்லைசை பாலில் நனைத்து உடனே கல்லில் போடவும்.
இருபுறமும் லேசாக சிவக்க விட்டு எடுக்கவும்.
லேசான இனிப்புடன், மெத்தென்ற டோஸ்ட் ரெடி.


குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மதியம் லன்ச் பக்க்ஸிற்கு வைத்தாலும் வரளாமல் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க ப்ரெட் டோஸ்ட் செய்தேன் காலையில் சூப்பர். அப்ராவுக்கும் இன்னைக்கு டிபன் அதுதான். ஒரு ப்ரெட் சாப்பிட்டாள். ரொம்ப நன்றிமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனீஷா,
நலமா? அஃப்ரா நலமா?
காலை டிபனுக்கு ரொம்ப நல்லா இருக்கும். பாராட்டுக்கு நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.