பீர்க்கங்காய் சட்னி

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 5 இலை
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை முதலில் எடுத்து வைத்து கொள்ளவும்.
முதலில் பீர்க்கங்காயை தோலினை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியதாக வெட்டி கொள்ளவும்.
பீர்க்கங்காய், தக்காளி மற்றும் மஞ்சள் தூளுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
அனைத்தும் வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவிட்டு அதன்பின் மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் வேகவிடவும்.
இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசை, சப்பாதியுடன் பரிமாறலாம்


மேலும் சில குறிப்புகள்