க்ரில்டு பைனாப்பிள்

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பைனாப்பிள் - 1
பட்டர் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி


 

முதலில் பைனாப்பிளை தோலினை நீக்கி வட்ட வட்டமாக ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி கொள்ளவும்.
இப்பொழுது க்ரில் பனியை (Grill Pan) சூடுப்படுத்தவும்.
சூடானதும் பட்டரினை தடவி பைனாப்பிளை போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
அதனை திருப்பி போட்டு மேலும் 1 - 2 நிமிடம் வேகவிடவும்.
கடைசியில் இதன் மேல் தேனினை ஊற்றவும்.
பரிமாறும் பொழுது இதன் மேல் ஐஸ்கீரிமை அல்லது ஐஸிங்கு வைத்து கொடுக்கலாம்.
குழந்தைகள் மிகவும் விருப்பி சாப்பிடுவார்கள்.


குழந்தைகள் மிகவும் விருப்பி சாப்பிடுவார்கள்.
க்ரில் பன் இல்லாதவர்கள் தோசை கல்லில்லேயே இதனை செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேலும் கிரில்ல்ட் பழங்கள் இது போல தோல் தடிமனான பழவகைகள் ஆப்பிள்/பீச்/பேரிக்காய் எல்லாம் கிரில் செய்யலாம். அதிகமா இனிப்பில்லாத டெசர்ட் வகைகள் நம் உடலுக்கும் நல்லது. பழம்/ஃபைபரும் ஆச்சு

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..