க்ரில்டு சிக்கன்

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி கால் - 3 (அ) 4
2. இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
3. பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
4. தேன் - 1 மேஜைக்கரண்டி
5. உப்பு
6. மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
9. சர்க்கரை - 1 தேக்கரண்டி
10. எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி


 

கோழி கால் சுத்தம் செய்து, கத்தியால் ஆழமான கோடுகள் இட்டு வைக்கவும்.
மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து கோழி காலில் பிரட்டி பிரிஜில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இதை மைக்ரோவேவில் 20 நிமிடம் (இடையில் ஒரு முறை திருப்பி விடவும்) க்ரில் செய்யவும்.


இதை BBQ'ம் செய்யலாம் (அ) அவனில் வைத்தும் பேக் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்