சிக்கன் ஹாரா மசாலா

image

வழங்கியவர் : asiya omar

தேதி : Sat, 24/01/2009 - 22:44

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 20 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • சிக்கன் எலும்பில்லாதது - கால் கிலோ
  • எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • தயிர் - 100 மில்லி
  • ப்ரெஸ் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
  • க்ரீன் ஆப்பிள் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கொத்தமல்லி இலை - 4 டேபிள்ஸ்பூன்
  • புதினா - 2 டேபிள்ஸ்பூன்
  • ஸ்பிரிங் ஆனியன் - ஒரு பன்ச்
  • உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

 

  • சிக்கனை சிறிய துண்டுகளாக்கி கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.
  • ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும்.
  • ஆப்பிள் 3 டேபிள்ஸ்பூன், மல்லி இலை, 2 டேபிள்ஸ்பூன் புதினா, தயிர், ஃப்ரெஷ் சீஸ், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, உப்பு, சர்க்கரை எல்லாம் மொத்தமாக போட்டு பல்ப் பண்ணிக்கொள்ளவும்.
  • நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சூடு பண்ணி அரைத்த கலவையை போட்டு 2 நிமிடம் சூடு பண்ணவும்.
  • அதனுடன் சிக்கன் துண்டு சேர்த்து சிம்மில் 15 நிமிடம் வேக விடவும்.
  • வெந்த பின்பு உலர் திராட்சையை சேர்த்து மீதி இருக்கும் மல்லியை தூவி பரிமாறவும்.
  • சுவையான சிக்கன் ஹாரா மசாலா ரெடி.

Note:

இதை நாண், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் சைட் டிஸ் ஆக பரிமாறலாம். பார்ட்டியில் செய்து வைத்தால் எல்லோர் கவனத்தையும் கவரும். நான் முன்பு ஒரு டீவி சேனலில் பார்த்தது.