get pregent

i am new for this site

help me please
i trying to get baby for a year. i have concive once but i have abortion 2 and half years ago because my family problem.after that i took the pills but now i have left for a year.also i am working as well. i need some advise please. please help me.

சகோதரி நந்தினி, நீங்கள் முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்தீர்களா? இல்லாவிடில் முதலில் மருத்துவரைப் பாருங்கள். அவர் உங்களைப் பரிசோதனை செய்து அதன் நிமிர்த்தம் தரும் ஆலோசனைப்படி நடப்பது மிக முக்கியம்.
மற்றையபடி நீங்கள் உங்கள் மன நிலையை சாதாரணமாக மகிழ்வாக வைத்திருக்கவும். நடந்ததை நினைத்துக் கவலைபடுவதோ மற்றும் வேறு ஏதாவது பிரச்சனையை மனதில் போட்டு மன அழுத்தத்திற்கு ஆளாவதோ கூடாது. இரண்டாவதாக உங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நல்ல சத்தான உணவுகளை உண்ணுங்கள். folic acid மாத்திரையை (இதனை நீங்கள் சாதாரணமாக எல்லா மருந்துக் கடையிலும் வாங்கலாம், இதற்கு மருத்துவரைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை,விரும்பினால் கேட்கவும்) மருத்துவர் ஆலோசனைப் படி தினமும் 1 எடுங்கள். வேறு ஏதாவது வைட்டமின் மாத்திரைகள் தேவையா என உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து அதன்படி அவற்றை எடுக்கவும்.
குழந்தை இன்னும் தங்கவில்லையே என்ற மன நிலையை முதலில் விடுங்கள். அது வரும்பொழுது வரட்டும் எனும் மன நிலையில் இருங்கள்.
நீங்கள் சந்தோசமாக இருந்தபின் சுத்தம் செய்யாமல் குறைந்தது 3 மணித்தியாலங்களாவது விடுங்கள். உடனே எழுந்திருக்கவும் வேண்டாம். முடிந்தது 30 நிமிடங்களாவது நிமிர்ந்து படுத்திருக்கவும்.

இதற்கு மேல் இறை நம்பிக்கை இருந்தால் உங்கள் பிரச்சனையை அவனிடம் விட்டு விடுங்கள்.

thank you ocean but i have done basic test doctor said nothing to worrie. i live in uk so i cant do any other test without when ever they give letter to hospital, also he said to wait for two years its too long. thanks again

k.nanthiny

வணக்கம் நந்தினி, உங்கள் பதிலைத் தற்பொழுது பார்த்தேன். நானும் இங்கிலாந்தில் தான் இருக்கின்றேன். இங்குள்ள மருத்துவமுறை மிகவும் மோசம் என நான் எனது அனுபவங்களிலும் எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். சரியான பரிசோதனைகளோ ஆலோசனைகளோ இங்கு கிடைப்பது அரிது. நீங்கள் இந்தியா சென்றால் அங்குள்ள மருத்துவர்கள் மூலம் சரியான பரிசோதனைகள் செய்யலாம். அதன்பின் நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
எதற்கும் காலமும் நேரமும் கூடி வரும்பொழுது எல்லாம் நன்றாக நடக்கும். மனதைத் தளர விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

இந்த வெப்சைட்டில் (www.babycenter.co.uk) உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம் என நம்புகின்றேன்.

thank ocean. my husband hasnt got visa so i am just wait for 6 month to see how is going then we will go to india. because now we apply for aproval certificate for register marriage so we have to wait atlest for three months or more so now i cant go to india. i will check the web site you send me. you know i just worrie about abortion i have done before because its make very scared.also i need know its not a problem to take folic acid even if i am not a pregenent.thanks again.sorry i am writing in english because i tryed in tamil nearly finish but suddenly i type a word every things gone thats why.

k.nanthiny

நந்தினி,
நீங்கள் கூறியதுபோல் பொறுத்திருந்து பாருங்கள், சரி வராவிட்டால் இந்தியா சென்று வரவும்.
நான் ஒரு வெப்சைட்டில் வாசித்தேன் "கணவன் மனைவி இருவருடைய உடலில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தாலும் கருத்தரிக்க ஒரு வருடமோ அல்லது இரண்டு வருட காலங்களோ எடுக்குமாம்".
ஆதலால் நீங்கள் பயப்படவோ யோசிக்கவோ வேண்டாம். நடந்தவற்றை நினைத்து நினைத்து உங்கள் மனதையும் உடலையும் தளர்த்திக் கொள்ளாமல் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருங்கள். காலம் கனிந்து வரும் பொழுது எல்லாமே எங்கள் விருப்பம் போல் இனிதே நிறைவேறும். சீக்கிரமே அந்த நல்ல நேரம் உங்களுக்கும் வர வேண்டுமென்று இறைவைப் பிரார்த்திக்கின்றேன்.

நானும் திருமணமாகி 2 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை. என்ன செய்ய. எல்லாவற்றுக்கும் இறைவன் நாடனும். எனது கணவரும் நானும் இன்னும் ஊருக்கு போகவில்லை. ஏனென்றால் எல்லோரும் ஏன் பிள்ளை இல்லை என்று கேட்டால் நான் தாங்க மாட்டேன். அந்தளவு மனமுடைந்து போயுள்ளேன். எனது கணவருக்கும் பிள்ளை என்றால் உயிர். ஆனால் எனக்கு முன்னாள் இறைவன் நாடினால் தரட்டும் என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார். நானும் 1 வருடமாக Dr ரிடம் போறன். ஒரு பிரச்சினையும் இல்லையாம். ஏன் தான் இறைவன் இவ்வளவு சோதிக்கிறானோ தெரியாது.

னன்ரி சசிய அன் ocean. எப்படி இருக்கிரிர்கள்? ocean நிங்கள் இலண்டனில் எந்த பகுதியில் வசிக்கிரிர்கள்? இன்ரூ snow இப்படி இருக்கு. நான் north east இருக்கிறன்.

நன்னுமு இப்பொது கடவுலின் கய்யில் விட்டு விட்டன். wait and see இருந்து பர்ப்பொம். என்னது கணவருக்கு குளந்தை என்றலால் விருப்பம் அன்னால் என்னா செய்வது எல்லாம் அவன் செயல்.

k.nanthiny

வணக்கம் சாசியா,
நலமா? கவலைப் படாதீர்கள். இறைவன் அருளால் சீக்கிரமே உங்கள் கையில் ஒரு குழந்தை தவழும்.
நான் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. நானும் உறவினர்கள் நண்பர்கள் என்று யாரிடமும் அடிக்கடி போவதில்லை தொலைபேசியிலும் தேவையைக்கொண்டுதான் பேசுவேன். கேட்பவர்களுக்குப் பதில் சொல்லமுடியாது. அனுபவித்தவர்களைத் தவிர வேறு எவராலும் எங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளமுடியாது. எதற்கும் கவலைப் படாதீர்கள். சிலர் 10 அல்லது 15 வருடங்களின் பின்பும் குழந்தை பெற்றிருக்கின்றார்கள். ஆதலால் மனந்தளராமல் இருங்கள்.

நந்தினி நலமா? நான் இருக்குமிடம் லண்டன் இல்லை Nottingham. லண்டனில் இருந்து இங்கு வருவதற்கு இரண்டரை அல்லது மூன்று மணித்தியாலங்கள் எடுக்கும். இங்கும் தொடர்ந்து பனி பொளிந்து கொண்டே இருக்கின்றது. நிற்பதாகத் தெரியவில்லை.

எனது கணவருக்கும் எனக்கும் கூட குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை, அதனாலோ என்னவோ எங்களுக்கும் அந்தப் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. என்றாவது இறைவன் கண் திறப்பான் எனும் நம்பிக்கையில் காத்திருக்கின்றோம். எங்களுக்குக் குழந்தை ஒரு மாதத்திலேயே தங்கி விடும். ஆறு ஏழு மாதம் வரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வளர்ந்து வரும், பின் ஏதாவது நடந்து தவறிவிடும். மருத்துவர்களாலும் இதுவரை காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எல்லாவற்றிற்கும் நேரம் வர வேண்டும்.
நீங்களும் பொறுமையாகக் காத்திருங்கள் இறைவன் அருள் கிடைக்கும்.

தோழிகளே, கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதில் உறுதியாக இருங்கள். மற்றவர்களின் கேள்விக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அடுத்தவர் மனதைப்பற்றி யோசிக்காமல் பேசுபவர்களின் வார்த்தைகளை நினைத்து நாம் ஏன் நம் மனதை வருத்திக் கொள்ளவேண்டும்.

எங்களின் ஃபஸ்ட் அனிவர்சரி முடிந்து 6-வது நாளில் என்மகன் பிறந்தான். திருமணம் முடிந்து மூன்றரை மாதம் முடிந்துதான் ஃப்ரக்னன்சி கன்பார்ம் ஆனது, அந்த குட்டி இடைவெளிக்குள் என்னை அழவைத்திருக்கிறார்கள் நம் மஹாணுபாவர்கள். இன்னுமா விசேஷம் இல்லையெனக் கேட்டதோடு மட்டுமல்லாமல், ஒன்னா மாமியாருக்கு இருந்த மாதிரியோ அல்லது அம்மா மாதிரியோ இருக்கும்மென்றார்கள். அதனால் நான் மிகவும் பயந்துவிட்டேன் ஏனெனில் என் அம்மாவிற்கு ஏழு வருடத்திற்குப்பின்னும், மாமியாரிற்கு ஐந்து வருடத்திற்கு பின்னும் தான் முதல் குழந்தை கன்பார்ம் ஆனது. நானும் பயந்து என் ஹஸ்சையும் பயமுறுத்திவிட்டேன். அவர் என்னிடம் காட்டிக் கொள்ளாமல், "ஏய் தேவையில்லாமல் கண்டதை நினைத்து பயப்படாமல் ஜாலியாயிரு, நாம் இப்பொழுதுதான் நியூ couple சந்தோசமா என்ஞாய் பண்ணுவோம்" என்பார். ஆனால் உள்ளூர தனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருந்ததென்று என்மகன் பிறந்தபிறகு சொன்னார்.

என் அம்மாவிற்கு 7-வருடத்திற்கு பிறகு மூன்றுமூன்று வருட இடைவெளியில் நாங்கள் மூன்றுபேர் (எனக்கு 2 எல்ட்ர் சிஸ்டர்ஸ்). என் மாமியாரிற்கு ஐந்தைந்து வருட இடைவெளியில் 3குழந்தைகள் (என் ஹஸ்சிற்கு ஒருதம்பி, ஒருதங்கை). என் அம்மா, அத்தை இருவரும் தாங்கள் சந்தித்த துன்பங்களை கதைகதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைய துன்பங்கள் நாளைக்கு கதையாகி விடும், அதனால் கடவுளை மட்டும் நம்புங்கள், மற்றவற்றை மனத்திற்கோ, மூளைக்கோ கொண்டு செல்லாமல் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். காதிற்கினிய சங்கீதம் கேழுங்கள், மனதிற்கு பிடித்ததை செய்துகொண்டு மனதை சந்தோசமாக வைத்திருங்கள் அதுவே நன்மையைத்தரும். நல்லதைப் பேசுங்கள், நல்லதை மட்டுமே நிணையுங்கள்.

சாரிப்பா, ரொம்ப பேசிட்டேன்னு நிணைக்கிறேன் இன்னும் ஒன்றேஒன்றுடன் முடித்துக்கொள்கிறேன். என் தோழி ஒருத்திக்கு, 15 வருடங்களிற்கு பின் ராஜா மாதிரி ஒரு மகன் பிறந்து இப்பொழுது அவனிற்கு 3வயதாகிறது. "வெரி இன்டலிஜென்ட் குட்டி," அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாங்கள் எல்லோரும் மிகவும் ரசிப்போம்.

நீங்களும் இதுபோல் ரசித்தும், சந்தோசித்தும் இருக்கும் நாட்கள் அதிக தூரத்திலில்லை, அதை எதிர்நோக்கிக் காத்திருங்கள். நானும், நம் அறுசுவைத் தோழிகளும் இறைவணைப் பிரார்த்திக்கிறோம். ஒருவருக்காக மற்றவர்கள் பிரார்த்திக்கும் பிரார்த்தணைக்கு எப்பொழுதும் சக்தி அதிகம்.

வாழ்த்துக்களுடன் உத்தமி :)...............

மேலும் சில பதிவுகள்