பட்டர் பீன்ஸ் காளிஃப்ளவர் மசாலா

தேதி: January 25, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டர் பீன்ஸ் - கால் கிலோ
காலிஃப்ளவர் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 1 (விருப்பப்பட்டால்)
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கறி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
லெமன் - பாதி (விருப்பப்பட்டால்)
மல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

பட்டர் பீன்ஸ் உரித்து வைத்துக்கொள்ளவும். காலிஃப்ளவர் சிறிய பூக்களாக கட் செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சிறியதாக கட் செய்து கொள்ளவும். எந்த மசாலா செய்தாலும் கொஞ்சம் உருளைக்கிழங்கு சேர்த்துப்போட்டால் ருசியாகவும் கிரேவி கெட்டியாகவும் இருக்கும்.
வெங்காயம், மல்லி இலை, மிளகாய் மெலிதாக கட் செய்யவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்க்கவும். கறிமசாலா சேர்க்கவும், மூடி சிம்மில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
பின்பு பட்டர்பீன்ஸ் சேர்க்கவும். திரும்ப பத்து நிமிடம் வேக வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்..
பாதி லெமன் ஜுஸ் பிழியவும் (விருப்பப்பட்டால்). மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பட்டர் பீன்ஸ் காலிஃப்ளவர் மசாலா ரெடி.


இது சப்பாத்தி, நாண், பரோட்டாவிற்கு நன்றாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்