காலிப்ளவர் ப்ரை

தேதி: January 26, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலி ப்ளவர் -- 1 பூ
கடலை மாவு -- 1 1/2 ஸ்பூன்
தோசைமாவு -- 1 ஸ்பூன்
கார்ன் ப்ளார் -- 1 ஸ்பூன்
மிளகாய் தூள் -- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 3 சிட்டிகை
உப்பு -- தே.அ
எண்ணைய் -- பொரிக்க
அரைக்க ::
----------
பூண்டு -- 10 என்னம்
இஞ்சி -- 1 1/2 அங்குலம் அளவு
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 3 என்னம்


 

முதலில் பூவை உதிர்த்து மிதமான சூடு உள்ள தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு 3 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் அலசினால் பூவில் உள்ள புழுக்கள் போய்விடும்.
அரைக்க வேண்டியவைகளை அரைத்து அவைகளை காலிப்ளவருடன் சேர்த்து நன்கு எல்லா இடமும் படுமாறு பிசைந்து விடவும். இவற்றை அப்படியே 5 நிமிடம் ஊறவிடவும்.
பின் கார்ன் ப்ளார், கடலை மாவு, தோசை மாவு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.
பின் கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து 3 நிமிடம் அப்படியே வைக்கவும்.
இது பஜ்ஜி மாவு பதத்திற்கு இல்லாமல் உதிராகத்தான் இருக்கும்.
இவைகளை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாற வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் பொரித்தவுடன் இருக்கும் மொரு மொருப்பு சிரிது நேரத்தில் குழந்து விடுகிறது ஏன்?